Actor Suriya: சூர்யா 44 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யா?.. அந்தமானில் விறுவிறு சூட்டிங்!
சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா..
சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் தற்போது அந்தமானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூலை முதல் வாரம் வரையில் இந்த சூட்டிங் தொடர்ந்து அங்கு நடக்கவுள்ளதாகவும் அடுத்ததாக உதகையில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து இரண்டு பாடல் காட்சிகளை அந்தமானில் படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

நடிகர் சூர்யா: சூர்யாவின் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படம் சர்வதேச அளவில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் அதிகமான கெட்டப்புகளில் சூர்யா காணப்படுவது ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.
இரட்டை வேடங்களில் சூர்யா: கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தின் சூட்டில்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது அந்தமானில் நடந்துவரும் நிலையில் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் இம்மாத துவக்கத்தில் அந்தமானில் துவங்கிய நிலையில், அடுதத மாதம் முதல் வாரம் வரை அங்கேயே சூட்டிங் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தமான் சூட்டிங்: இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங்கை உதகையில் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தமானில் படத்தின் அடுத்தடுத்த இரண்டு பாடல் காட்சிகளின் சூட்டிங்கை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் சூழலில் படத்திற்கு சிறப்பான பாடல்களையும் பின்னணியையும் அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய தினம் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக சந்தோஷ் நாராயணனை சமூக வலைதளத்தில் நடிகர் சூர்யா வாழ்த்தியதை பார்க்க முடிந்தது.

சூர்யா வாழ்த்து: இதையடுத்து சூர்யாவின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துள்ள சந்தோஷ் நாராயணன், சூர்யா 44 படத்தில் இணைந்து பணியாற்ற மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கங்குவா படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், சூர்யா 44 படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் கங்குவா மற்றும் சூர்யா 44 படங்கள் சில மாத இடைவெளிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











