வாவ்.. சுவிஸ் பார் ஓனரை பார்க்க விரும்பும் நடிகர் விவேக்.. என்ன மேட்டருன்னு பாருங்க மக்களே!

சென்னை: சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ள ஒரு பாரால் நடிகர் விவேக் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் இதுவரை நுற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் விவேக்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருக்கிறார் விவேக். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அட்டகாசமான மெஸேஜை சொல்லி வருகிறார்.

போட்டுத்தாக்கி

போட்டுத்தாக்கி

தைரியமாக பல விஷயங்களையும் போறப் போக்கில் காமெடியாக போட்டுத்தாக்கிவிடுவார் விவேக். அவர் பேசிய பல டயலாக்குகள் பெரும் பிரபலம்.

காமெடி அலப்பறை

காமெடி அலப்பறை

இந்நிலையில் நடிகர் விவேக் ஐந்தாம் படை படத்தில் நடிகர் விவேக்கும் நடிகரும் இயக்குநருமான சுந்தர் சியும் செய்யும் காமெடி அலப்பறைகள் பெரும் வரவேற்பை பெற்றது.

பி ஹேப்பி

பி ஹேப்பி

அந்தப் படத்தில் எலே டோன்ட் வொர்ரி பி ஹேப்பி என்ற விவேக்கின் டயலாக் பல சூழ்நிலைகளிலும் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

பி ஹேப்பி பார்

பி ஹேப்பி பார்

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பாருக்கு அதன் உரிமையாளர் டோன்ட் வொர்ரி பி ஹேப்பி பார் என்று பெயரிட்டுள்ளார். அதனை பார்த்த விவேக்கின் ரசிகர் ஒருவர், அந்த பாரை போட்டோ எடுத்து அவருக்கு டிவிட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.

உங்களுக்காக..

மேலும் விவேக் சார், இந்த பாரின் உரிமையாளர் உங்களின் ரசிகர் என்று நினைக்கிறேன். இந்த பார் சுவிட்சர்லாந்தில் உள்ளது. உங்களை நினைவில்கொள்வதற்காக உள்ளே சென்று பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.

கு பீர்னு மகிழ்ச்சி

அவரது இந்த டிவிட்டிற்கு நடிகர் விவேக் செம ஜாலியாக பதில் தெரிவித்திருக்கிறார். அவர் பதிவிட்டிருப்பதாவது, வாவ்.. சூப்பர்.. நானும் அந்த உரிமையாளரை பார்க்க விரும்புகிறேன். என்னை பார்த்ததும் அவருக்கு கு" பீர்"னு ஒரு மகிழ்ச்சி வரும்!! என்று இரட்டை அர்த்தத்தில் டிவிட்டியிருக்கிறார்.

எவனோ நம்ம பயதான்

இந்த டிவிட் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் விவேக்கிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எவனோ நம்ம பய தான்.. ஸ்விட்சர்லாந்துல போய் கடைக்கு பேர் வச்சிருக்கான்.. என்கிறார் இந்த ரசிகர்.

கவிதை கவிதை..

கு"பீர்.. கவிதை !! கவிதை !! என்கிறார் இந்த நெட்டிசன்.

காப்பி அடிச்சீங்களா?

உண்மையை சொல்லுங்க அவங்க உங்களை பாத்து காப்பி அடிச்சாங்களா இல்லை நீங்க அவங்கள பார்த்து காப்பிஅடிச்சீங்களா.. சிசி பாக்யராஜ்.. என்று ஸ்மைலி ஈமோஜியுடன் கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X