மீண்டும் தனி விமானத்தில் விக்கி நயன்தாரா.. இணையத்தை திணறடிக்கும் கலக்கல் போட்டோஸ்!
சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலருடன் மீண்டும் தனி விமானத்தில் பறக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் என டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார்.

விக்கியுடன் காதல்
அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

வாயே திறக்கவில்லை
இருவரும் லிவிங் டூகெதரில் வசித்து வருகின்றனர். அண்மையில் இருவரும் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி வந்தனர். ஆனால் அது குறித்து இருவரும் வாயே திறக்கவில்லை.

கோவா பயணம்
இதனிடையே இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த போட்டோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் கடந்த லாக்டவுனால் வெளிநாடு செல்ல முடியாத நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கோவா சென்றனர்.

ஓணம் கொண்டாட்டம்
தனி விமானம் மூலம் இருவரும் கோவாவுக்கு ரிலாக்ஸ் செய்துகொள்ள சென்றனர். அதனை தொடர்ந்து ஓணம் கொண்டாடவும் தனி விமானத்தில் விக்கியுடன் கேரளாவுக்கு தனி விமானத்தில் சென்றார் நயன்தாரா.

மீண்டும் தனி விமானம்
அவர்கள் இருவரும் ட்ரெடிஷ்னல் உடையில் ஓணம் கொண்டாடிய போட்டோக்கள் வைரலானது. இந்நிலையில் நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் மீண்டும் தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ளனர்.

வைரலாகும் போட்டோஸ்
விமானத்திற்குள் அமர்ந்திருக்கும் நயன்தாராவை பல கோணங்களில் போட்டோவும் வீடியோவும் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளா விக்னேஷ் சிவன். அந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷு பண்டிகை?
கேரளாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொச்சி செல்கிறார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற தகவல் வெளியாகவில்லை.

திணறடிக்கும் போட்டோஸ்
இந்த போட்டோவில் நயன்தாரா நீல நிற ஜீன்ஸ் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து கண்களில் கூலர்ஸ், கையில் ஹேண்ட் பேக் என கலக்கலாக உள்ளார். இதேபோல் விக்னேஷ் சிவன், சிவப்பு நிற ஷூ சிவப்பு நிற பனியன் கறுப்பு பேண்ட் கறுப்பு ஜெர்க்கினுடன் செல்கிறார். இந்த போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications