twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன ஒரு காட்டுமிராண்டித்தனம், ஏன் இப்படி? : காயத்ரி ரகுராம் கொந்தளிப்பு

    By Siva
    |

    சென்னை: என்ன ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று கூறி ட்விட்டரில் காயத்ரி ரகுராம் கொந்தளித்துள்ளார்.

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்மாவத் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் குருகிராமில் பள்ளி மாணவ, மாணவியர் சென்ற பேருந்தை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

    ட்வீட்

    ஒரு படத்திற்காக பள்ளி பேருந்தை தாக்குவது காட்டுமிராண்டித்தனம். ஏன் இவ்வளவு வன்முறை, மக்களுக்கு என்னாகிவிட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    ஆங்கிலம்

    காயத்ரி ரகுராம் ஆங்கிலத்தில் ட்வீட் செய்யும்போது எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது. அதை பலரும் சுட்டிக்காட்டி உங்களின் ஆங்கிலம் மோசம் என்று தெரிவித்துள்ளனர்.

    யாரு?

    யார் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று ஒருவர் காயத்ரி ரகுராமிடம் கேள்வி எழுப்பியுள்ளார். சிலரோ நீங்கள் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர்.

    கொடுமை

    கொடுமை

    படத்தை எதிர்க்கிறவர்கள் எதற்காக பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனத்தை தாக்கினார்கள் என்று நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

    English summary
    Gayathri Raghuram has tweeted that, 'For a movie burning school bus is atroshious what happened to ppl why so much violence. Action needs to be taken.' She tweeted so after Padmaavat protesters attacked a school bus in Gurugram on wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X