Attakathi movie: மீண்டும் இணையும் அட்டக்கத்தி காம்போ.. கேங்ஸ்டர் கதைக்களத்தில் பா ரஞ்சித் படம்!
சென்னை: தினேஷ் -பா ரஞ்சித் காம்பினேஷனின் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது அட்டக்கத்தி படம். சென்னைவாசிகளின் யதார்த்தமான வாழ்க்கையை இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் நாயகன் தினேஷ். இந்தப் படத்தை தொடர்ந்து அட்டக்கத்தி தினேஷ் என்றே அவர் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு இந்த கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காதல் போயின் சாதல் என்றெல்லாம் இல்லை, காதல் போனால் இன்னொரு காதல் என்பதை சிறப்பான தினேஷின், தினகரன் கேரக்டர் மூலம் பா ரஞ்சித் சிறப்பாக வெளிப்படுத்தினார்.
தன்னுடைய அறிமுகப்படத்திலேயே அட்டக்கத்தி படத்தின் சிறப்பான திரைக்கதையால் ரசிகர்களை கட்டிப் போட்டார் பா ரஞ்சித். காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் செயல்படும் தினேஷிற்கு காதல் திருமணம் அமைந்ததா என்பதை கதைக்களமாலக இந்தப் படம் கொண்டிருந்தது. பெரிய சீரியஸ் கதைக்களத்தையெல்லாம் தேர்ந்தெடுக்காமல், தினேஷின் கேரக்டர் மூலம் இலேசான நகைச்சுவையையும் கதை முழுவதும் இழையோட விட்டிருந்தார் பா ரஞ்சித். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு நீண்ட காலங்களாக ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இயக்குநர் பா ரஞ்சித்: பா ரஞ்சித் ரஜினிகாந்த், விக்ரம், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை இயக்கிவருகிறார். அடுத்ததாக விக்ரம் -பா ரஞ்சித் காம்பினேஷனில் தங்கலான் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் பா ரஞ்சித் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சுதந்திர போராட்ட காலகட்டத்தை சேர்ந்த கேஜிஎப் பகுதி தமிழ் மக்களை கதைக்களமாக பா ரஞ்சித் கொண்டுள்ளார். இதன் மிரட்டலான போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவலாக கவர்ந்துள்ளன.
பாலிவுட் போகும் பா ரஞ்சித்: இந்தப் படத்தை தொடர்ந்து சார்பட்டா 2 படத்தினை இயக்க கமிட்டாகியுள்ளார் பா ரஞ்சித். ஆர்யா லீட் கேரக்டரில் நடித்து வெளியான இந்தப் படத்தின் முதல் பாகம், மிரட்டலாக அமைந்தது. ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாகவும் மாறியது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் பா ரஞ்சித். ரன்வீர் சிங் இந்தப் படத்தின் நாயகனாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் அட்டக்கத்தி கூட்டணி: படத்திற்கு பிர்சா என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் அட்டக்கத்தி தினேஷுடன் பா ரஞ்சித் இணைந்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் அட்டக்கத்தி படத்தின் அடுத்த பாகமா என்பது குறித்து தகவல்கள் இல்லை. படம் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் குறுகிய கால தயாரிப்பாக படம் உருவாகவுள்ளதாகவும் 45 நாட்களுக்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்த படங்களில் பா ரஞ்சித்: பா ரஞ்சித் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், சார்பட்டா 2 படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பாலிவுட்டில் களமிறங்கவுள்ள பா ரஞ்சித், அடுத்தடுத்து சூர்யா மற்றும் கார்த்தி லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள படங்களையும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அட்டக்கத்தி காம்பினேஷனும் விரைவில் இணையவுள்ளது. இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கி தயாரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











