விக்ரம் சுகுமாறனின்“தேரும் போரும்“.. அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார் !

சென்னை : விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கவுள்ள படத்துக்கு "தேரும்போரும்" என தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ளது.

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாறன். இவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் "தேரும் போரும்"

Attakathi Dinesh and Vikram sugumaran next film Therum porum

இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி குக்கூ, விசாரணை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து, அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார்.

Attakathi Dinesh and Vikram sugumaran next film Therum porum

மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராகவும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர். மக்கள் தொடர்பு - சதிஷ் (AIM). இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி எழுதி அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

Attakathi Dinesh and Vikram sugumaran next film Therum porum

மிகுந்த பொருட்செலவில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்குபெரும் "தேரும் போரும்" படத்திற்கு இப்போதே சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல்வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் துவங்க இருக்கிறது.

Attakathi Dinesh and Vikram sugumaran next film Therum porum

"தேரும் போரும்" திரைப்படத்தை வில்அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்'ஸ் சார்பாக நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகின்றனர்.

Attakathi Dinesh and Vikram sugumaran next film Therum porum

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X