அட்டகத்தி தினேஷ் நடிக்கும் 'திருடன் போலீஸ்'

By Mayura Akilan

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் திருடன் போலீஸ் படத்தில் ரம்மி பட புகழ் ஐஸ்வர்யா நடிக்கிறார்.

குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த S .P.சரணின் கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

திருடன் போலீஸ் படத்தினை கார்த்திக் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

எஸ்.பி.பி சரண் தயாரிப்பு

எஸ்.பி.பி சரண் தயாரிப்பு

உன்னைச் சரணடைந்தேன் படத்தினை 2003ம் ஆண்டு தயாரித்த எஸ்.பி.பி சரண், தொடர்ந்து மழை, சென்னை 600028, குங்குமப்பூவும், கொஞ்சுபுறாவும், நாணயம், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

திருடன் போலீஸ்

திருடன் போலீஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருடன் போலீஸ் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் அட்டகத்தி படத்தில் நடித்த தினேஷ், ரம்மி ஹீரோயின் ஐஸ்வர்யா நடிக்கின்றனர்.

வித்யாசமான கதை

வித்யாசமான கதை

இந்த படம் பற்றி கூறிய எஸ்.பி.பி சரண், "நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தையப் படங்கள், எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது 'திருடன் போலீஸ்' படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாகப் படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது.

நண்பர் யுவன் இசை

நண்பர் யுவன் இசை

எனது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா முற்றிலும் ஒரு புதிய இசையைத் தர உள்ளார் என்பது நிச்சயம். எனது முந்தையப் படங்கள் போலவே இந்தப் படமும் சிறந்த படமாக அமையும் என்று கூறியுள்ளார்.

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

இந்த படத்தில் பால சரவணன், நிதின் சத்யா, ஜான் விஜய், நான் கடவுள் புகழ் ராஜேந்திரன் மற்றும் சில திறமையான கலைஞர்கள் நடிக்க உள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த். படத்தொகுப்பாளர் பிரவீன். கலை ஜாக்கி. நகைச்சுவை மிளிர சிந்திக்க வைக்கும் இக்கதையை எழுதி, வசனம் இயற்றி, இயக்கி அமைத்திருப்பவர் கார்த்திக் ராஜு . திறமையான கலைஞர்கள் ஒருமித்து இருக்கும் இந்தப் படம் நிச்சய வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X