நச்சுன்னு ஒரு முடிவு.. கையில் "அதை" எடுத்த அட்டக்கத்தி தினேஷ்.. டைட்டில் என்ன தெரியுமா?
சென்னை : அட்டகத்தி தினேஷ் இயக்குனராக களம் இறங்க உள்ளார்.
அட்டக்கத்தி படத்திற்கு பிறகு குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ் உள்ளிட்டப்படங்களில் நடித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கிய விசாரணை தினேஷூக்கு வெற்றிப்படமாக அமைந்தது.அதே போல, ஒரு நாள் கூத்தும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

மகுடம்
2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் தினேஷூக்கு அட்டக்கத்தி தினேஷ் என மகுடம் சூட்டப்பட்டது.அதன் பிறகு ஆடுகளம் மற்றும் எதிர்நீச்சல் போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சிறந்த நடிப்பு
அந்த படத்தைத் தொடர்ந்து பார்வையற்ற இளைஞனராக குக்கூ படத்தில் நடித்திருப்பார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்தாக ரஜினிகாந்துடன் கபாலி படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை படத்திலும் நடித்திருப்பார் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்தது.

நானும் சிங்கிள் தான்
இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்தார். இப்படத்தில் ஒரு லாரி ஒட்டுநராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார் அட்டக்கத்தி தினேஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நானும் சிங்கிள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிறுடா
இந்நிலையில் அட்டக்கத்தி தினேஷ் தற்போது இயக்குனராக களமிறங்க உள்ளார். அவர் இயக்க உள்ள படத்திற்கு வித்தியாசமாக வயிறுடா என பெயர் வைத்துள்ளார். அட்டக்கத்தி தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போஸ்டரை பதிவிட்டுள்ளார். இப்படத்தை அவரே நடித்தும் இயக்கவும் உள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











