ரஜினி படத் தலைப்பில் கார்த்தி - அட்டகத்தி ரஞ்சித் இயக்குகிறார்!
கார்த்தி அடுத்து நடிக்கும் புதிய படத்துக்கு காளி என்று தலைப்பிட்டுள்ளனர். எழுபதுகளின் இறுதியில் ரஜினி நடிக்க ஐவி சசி இயக்கத்தில் வெளியான படத்தின் தலைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இந்த காளியை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

காளி படம் முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கேதரைன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கார்த்தி நடித்துள்ள ஆல்இன்ஆல் அழகுராஜா வரும் தீபாவளிக்கு வருகிறது. அடுத்து பிரியாணி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இந்த காளி, தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் எனத் தெரிகிறது.
நல்ல ப்ளானிங்!
Comments


Click it and Unblock the Notifications