Lubber Pandhu Blue Sattai Review: லப்பர் பந்துக்கு ப்ளூ சட்டை மார்க் என்ன தெரியுமா? விபரம் இதோ!
சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகவுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் நாளை அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் அனைவரும் படத்தை பாராட்டி வருகின்றனர். படத்தைப் பார்த்த பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்தப் படத்தில் காணலாம்.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திக் உருவாகியுள்ள லப்பர் பந்து படம் தொடங்கும்போது ஒரு பீரியாடிக் படமாகத் தொடங்குகின்றது. இது பீரியாடிக் படம் என லப்பர் பந்தின் விலை ரூபாய் 15இல் இருப்பதில் இருந்து காட்டப்படுகின்றது. படத்தில் முதலில் அறிமுகம் செய்யப்படுவது அட்டக்கத்தி தினேஷைத்தான். தினேஷ் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இவரது விக்கெட்டினை இப்படி பந்து வீசினால் வீழ்த்திவிட முடியும் என தனது சிறுவயதில் கண்டுபிடித்துச் சொல்கின்றார் ஹரிஷ் கல்யாண்.

படத்தின் நிகழ்காலக் கதையில் லப்பர் பந்தின் விலை ரூபாய் 35ஆக உள்ளது. இதை வைத்து படம் நிகழ்காலத்தில் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டும் இல்லாமல் சாதி மறுப்புத் திருமணம் செய்தவராகவும் உள்ளார். விளையாடும் இடத்தில் தினேஷ்க்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் மோதல் ஏற்படுகின்றது. அது முழுக்க முழுக்க ஈகோ மோதலாக உள்ளது.

வெற்றி: ஆனால் தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான், தினேஷ் எனத் தெரியாமல் ஹரிஸ் கல்யாண் தொடர்ந்து அவருடன் மோதலிலேயே ஈடுபடுகின்றார். இறுதியில் அவரது காதல் கைகூடியதா? இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னைகள் சரி ஆனதா? கிரிக்கெட்டில் யார்தான் வெற்றி பெற்றார்கள் என்பது மீதிக் கதை.

தரமான காட்சிகள்: படம் தொடங்கி சில மணி நேரங்களில் சாதிச் சண்டையை காட்டுகின்றார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, இனி அவ்வளவுதான் சாதி ஒழிப்பு பாடம் நடத்தப்போகின்றார்கள் என பயத்தோடு படத்தைப் பார்த்தேன். ஆனால் படத்தினை அப்படிக் கொண்டு போகாமல், சிறப்பாகவே நகர்த்தியுளனர். குறிப்பாக சுவாரஸ்யமான கிரிக்கெட் காட்சிகள், ரசிக்கும்படியான குடும்பக் காட்சிகள், தரமான இடைவேளைக் காட்சி என படம் சிறப்பாகவே உள்ளது.

சாதிய சமத்துவம்: இதுமட்டும் இல்லாமல், படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியிலும் கதை சிறப்பாகவே உள்ளது. இப்படியான படங்கள் வெளிவந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. ஒரு ஹீரோவுக்கும் இன்னொரு ஹீரோவுக்கும் இடையிலான மோதலை அடுத்து என்ன அடுத்து என்ன என்ற திரைக்கதையில் சிறப்பாக சொல்லி உள்ளார்கள். சாதி பிரச்னைகளைக் கொண்டு வராமல், சாதிய சமத்துவத்தை பேசுகின்ற படமாக ரசிக்கும் படியான காட்சிகள் அமைத்துள்ளார்கள். குடும்பத்துடன் பார்க்க சரியான படம்" என தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











