Lubber Pandhu Box Office: பாராட்டுகளின் சிக்ஸர் மழையில் லப்பர் பந்து.. பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் விபரம்!

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை. குறிப்பாக கிராமங்களில் விளையாடப்படும் லப்பர் பந்து கிரிக்கெட்டினை மைய்யமாகக் கொண்ட கதை. இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழரசன் பச்சமுத்து அறிமுகமாகின்றார். லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். படம் கடந்த 20ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்கள் வரிசையில் அதிகம் கவனிக்கப்படும் இடத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உள்ளார். தனது சினிமா வாழ்க்கையை, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெளிச்சத்தை வைத்து மெருகேற்றிக் கொண்டவர், தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். இன்றை இளைஞர்கள் மத்தியில் ஹரீஷ் கல்யாண் என்றாலே, ஒரு ஃபீல் குட் மூவியைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பார்க்கிங் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இவரது நடிப்பு, நடிப்பில் கைதேர்ந்தவர் என பாராட்டப்படும், எம்.எஸ். பாஸ்கரின் நடிப்புக்கு போட்டி போடும் அளவிற்கு சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டினர்.

lubber pandhu blue sattai maran

படத்தின் கதைக்களம் கிராமப் புறங்களில் நடைபெறும் கதைக்களம் என்பதால், கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்ததாக மாறியுள்ளது. படத்தைப் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி படத்தை மனதாரா பாராட்டினார். குறிப்பாக, " லப்பர் பந்து தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். கிராமப் புறங்களில் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் சிறப்பாக படம் பிடித்துள்ளார்கள். நானும் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்து ஆகியவற்றில் கிரிக்கெட் விளையாடித்தான் இப்போது கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளேன். இதனால், படம் பார்க்க பார்க்க பல காட்சிகளில் என்னால் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. இந்த படம் வெற்றி அடைய படக்குழுவினருக்கு வாழ்த்துகள். தமிழ்ப் படங்களில் இந்தப்படம் நல்ல படமாக இருக்கும்" என தெரிவித்திருந்தார்.

lubber pandhu blue sattai maran

ஃபீல் குட் மீவி: அதேபோல் படத்தினைப் பார்த்த பொதுமக்களும் படம் சிறப்பாக இருப்பதாகவும், படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் பார்க்கும் அனைவருக்கும் இந்தப் படம் நல்ல ஃபீல் குட் மூவி என்ற உணர்வை ஏற்படுத்தும். கெத்து என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் படத்தை தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் எனவும் கூறினர்.

lubber pandhu blue sattai maran

ப்ளூ சட்டை: அதேபோல் படம் குறித்து விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறுகையில், "படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியிலும் கதை சிறப்பாகவே உள்ளது. இப்படியான படங்கள் வெளிவந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. ஒரு ஹீரோவுக்கும் இன்னொரு ஹீரோவுக்கும் இடையிலான மோதலை அடுத்து என்ன அடுத்து என்ன என்ற திரைக்கதையில் சிறப்பாக சொல்லி உள்ளார்கள். சாதி பிரச்னைகளைக் கொண்டு வராமல், சாதிய சமத்துவத்தை பேசுகின்ற படமாக ரசிக்கும் படியான காட்சிகள் அமைத்துள்ளார்கள். குடும்பத்துடன் பார்க்க சரியான படம்" என படத்தை மனதாரா பாராட்டியுள்ளார்.

lubber pandhu blue sattai maran

வசூல் விபரம்: படம் குறித்து அனைத்து ஊடகங்களும் நல்ல விமர்சனங்களையே கொடுத்து வருகின்றது. படம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 முதல் 220 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதாக கூறப்பட்டது. ஆனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பைப் பார்த்த மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகளில் படத்தின் காட்சிகளையும் படத்திற்கான ஸ்க்ரீன்களையும் அதிகப்படுத்தியுள்ளனர். படம் முதல் நாளில் சுமார் 75 முதல் 85 லட்சங்கள் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் இருந்து தகவல்கள் வெளியானது. இரண்டாவது நாளில், மக்களின் ஆதரவும், அதிகமாக்கப்பட்ட காட்சிகளினாலும் படத்தின் வசூல் முதல் நாளைவிட எகிறியது. அதாவது இரண்டாவது நாளில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 1.35 கோடிகளில் இருந்து ரூபாய் 1.75 கோடிகள் வரை வசூல் ஆகியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. மொத்தத்தில் படம் முதல் இரண்டு நாட்களில், ரூபாய் 2.10 கோடியில் இருந்து ரூபாய் 2.50 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

lubber pandhu blue sattai maran

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X