twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடித்து, மாடியில் இருந்து தள்ளி கொல்லப் பார்த்தேனா?: பார்த்திபன் விளக்கம்

    By Siva
    |

    சென்னை: தன் மீது காவல் நிலையத்தில் கொலை முயற்சி புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் பார்த்திபன்.

    இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்த ஜெயங்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார்.

    Attempt murder complaint: What does Parthiban say?

    திருவான்மியூர் வீட்டில் கொள்ளை நடந்த பிறகு ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்க சென்ற இடத்தில் பார்த்திபன் தன்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யப் பார்த்ததாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இது குறித்து பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி! என்று தெரிவித்துள்ளார்.

    தன் மீது புகார் அளித்தவர் பற்றியும் காமெடியாக ட்வீட் செய்துள்ளார் பார்த்திபன்.

    English summary
    Director cum actor Parthiban has reacted to the complaint given by his former servant at the Nungambakkam police station.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X