Vishal - எப்போதும் உறுதுணையாக இருப்பேன் - விஷால் அளித்த உறுதி யாருக்கு தெரியுமா?
சென்னை: Vishal (விஷால்) சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷால் எப்போதும் துணையாக இருப்பேன் என உறுதியளித்திருக்கிறார்.
செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார. செல்லமே படம் ஓரளவு வெற்றி பெற்று படவாய்ப்புகள் அமைந்தன. அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

ஹிட்டுக்காக ஏங்கும் நடிகர் விஷால்: ஆனால் சமீபமாக ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் எந்தப் படமும் ரசிகர்களை கவராததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக உழைத்துவருகிறார் அவர். சமீபத்தில் நடித்த லத்தி படமும் அவருக்கு மோசமான தோல்வியையே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சதிரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு 33ஆவது படமாகும். இப்படத்தில் செல்வராகவனும் நடித்திருக்கிறார்.. இந்தப் படத்தின் மூலமாவது விஷாலுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
விஷால் அளித்த உறுதி: இந்நிலையில் நடிகர் விஷால் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சென்னையில் ஒரு கிராம விழா' நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது மறைந்த இயக்குனரும், நடிகருமான மனோபாலா அவர்களுக்கு விஷால் உள்ளிட்ட அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். சென்னையில் ஒரு கிராமம் விழா நிழச்சியில் வரும் வருவாய் அனைத்தும் நலியுற்ற விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பதாலேயே நான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
டிக்கெட் மூலம் உதவி: விவசாயி 'சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!' என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன்.கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது.

ஒரு ரூபாய் கொடுங்கள்: எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ மாணவ, மாணவியர்களுக்காகத்தான். அந்த வகையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் நீங்களும் உதவலாம் இங்கு கலந்துகொண்டுள்ள அனைவரும் உங்களால் முடித்தால் ஒரு ரூபாய் கொடுக்க விரும்பினால் உங்களால் ஒரு விவசாயி குடும்பத்துக்கோ அல்லது ஒரு மாணவ, மாணவி படிப்பதற்காகவோ உதவ முடியும்" என்றார்.


Click it and Unblock the Notifications