அக்ஷரா, வருண் இடையே இருப்பது நட்பா.. இல்லை அதையும் தாண்டி புனிதமானதா.. அதிரடி கேள்வி !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நேற்றைய நிகழ்ச்சியில், வருண் அக்ஷரா இடையே இருப்பது நட்பா... இல்லை அனைவரும் அசத்து போகும் அளவுக்கு ஒரு ஆடியன்ஸ் கேள்வி கேட்டார்.
இந்த கேள்விக்கு வருண் அழகாக நிறுத்தி நிதானமாக பதில் அளித்தார்.
வீட்டிற்குள் அக்ஷரா மற்றும் வருண் பற்றி பல கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கும் போது ஆடியன்ஸ்சின் இந்த கேள்வியால் வருண் அக்ஷரா நிச்சயம் ஷாக்காகி இருப்பார்கள்.

வருண் அக்ஷரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் காட்சிகளும், கிசுகிசுக்களும் ஏற்பட்டுவிடும். அதனால் இந்த மாதிரி தற்போதைய சீசனில் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் பீல் பண்ணி கொண்டிருக்கும்போது, ஒரு சில ரசிகர்கள் அக்ஷரா மற்றும் வருண் பற்றி பல கிசுகிசுக்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத இவர்கள் இருவருமே ஜாலியாக விளையாட்டை விளையாடி வருகின்றனர்

அசத்தலான டான்ஸ்
அதேபோல டான்ஸ் டாஸ்கில், ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் ஆடிக் கொண்டிருக்கும்போது அக்ஷரா மற்றும் வருணின் ஆட்டத்தை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டனர். அதுவும் வருண் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றிய மனதிருப்தியில் வளைந்து வளைந்து ஆடி அனைவரின் கண்களையும் அவர் பக்கமே இழுத்துக் கொண்டார்.

நட்பா?
இந்நிலையில், நேற்று கமலின் முன்பாக ஆடியன்ஸ் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தினேஷ் என்பவர் வருணிடம் எனக்கு ஒரு கேள்வி உள்ளது என்று குண்டக்க மண்டக்காவான கேள்வியை கேட்டார். அதில், வருண் அக்ஷரா இடையே இருப்பது நட்பா... இல்லை அதையும் தாண்டி புனிதமானதா என்று கேட்டார்.

நல்ல நட்பு
ஆடியன்ஸின் இந்த கேள்விக்கு பதிலளித்த வருண், இந்த வீட்டில் கிடைத்த நல்ல நட்புனா அது அக்ஷராதான்... என்னுடைய எண்ணமும் அக்ஷராவின் எண்ணமும் பல நேரங்களில் ஒன்றாக உள்ளது. இங்க மட்டும் இல்லாமல் வெளில் சென்றாலும் எங்கள நட்பு தொடரும் என்றார். வருணின் இந்த பதிலுக்கு போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆடியன்சும் கைகளை தட்டி பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











