மீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்

விஜய் டிவியில் ஒளிபரப்பான வீ ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சி கலகலப்பாக பிக் பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : We Are The Boys U : மீண்டும் கலக்க வரும் பிக் பாஸ் பாய்ஸ் கியாங்

சென்னை: வீ ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களைக் கலகலப்பாக்கி, 'சே உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்பா' என சொல்ல வைத்து விட்டனர் பாய்ஸ் கேங்.

கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக பலருக்கு சாப்பிடும், தூங்கும் நேரம் போக மற்ற நேரமெல்லாம் பலருக்கு பிக் பாஸ் பற்றித் தான் பேச்சு, மூச்சாக இருந்தது. கடந்த சீசன்களில் இருந்து இம்முறை ஒரு கமர்சியல் சினிமா போல, காதல், காமெடி, சண்டை, வில்லத்தனம், உருக்கம் என பலவற்றின் கலவையாக அமைந்து மாபெரும் வெற்றி பெற்று விட்டது பிக் பாஸ்.

அதிலும் குறிப்பாக இம்முறை பிக் பாஸ் வீட்டில் மக்களை அதிகம் கவர்ந்தது கவிலியா காதல் ஒருபுறம் என்றால், பாய்ஸ் கேங்கின் அலப்பறைகள் மறுபுறம். எல்லாவற்றிற்கும் ஒரு கவுண்டர் கொடுத்து சாண்டி இந்த சீசனை விறுவிறுப்பாக வைத்துக் கொண்டார் என்பது மறுக்க இயலாது.

வீ ஆர் தி பாய்ஸ்

வீ ஆர் தி பாய்ஸ்

பிக் பாஸ் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில், போட்டியாளர்களின் சமூகவலைதளப் பக்கப் பதிவுகளை பார்த்து மட்டுமே தங்களை கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி வந்தனர் ரசிகர்கள். அவர்களுக்கு விருந்து வைப்பது போல் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது வீ ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சி.

குருநாதா

குருநாதா

இதில் சாண்டி, கவின், முகென் மற்றும் தர்ஷன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள, மாகாபா ஆனந்த்தும், ரியோவும் தொகுத்து வழங்கினர். சிலர் குருநாதா டீ சர்ட்டும், சிலர் வீ ஆர் தி பாய்ஸ் டீ சர்ட்டும் அணிந்திருந்தனர். நிகழ்ச்சியை கொஞ்சமும் விறுவிறு குறையாமல் பார்த்துக் கொண்டனர் பாய்ஸ் டீம்.

வனிதா

வனிதா

அவர்களது கலகலப்பான பேச்சு, இடையிடையே காட்டப்பட்ட பிக் பாஸ் காட்சிகள் எல்லாமே நன்றாக இருந்தது. சுமார் இரண்டரை மணி நேரங்களுக்கு மேலாக ஒளிபரப்பான போதும், நிகழ்ச்சியை சலிப்பில்லாமல் உருவாக்கியதற்கு நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். தயவு தாட்சண்யமே இல்லாமல் வனிதாவையும், மீராவையும் பங்கம் செய்தனர் சாண்டி அண்ட் கோ.

நேரில் வந்த பவர் பாட்டி

நேரில் வந்த பவர் பாட்டி

திடீர் சர்ப்பிரைசாக சாண்டியின் கற்பனைக் கதாபாத்திரமான பவர் பாட்டியும் இடையில் வந்து கொஞ்சம் கலகலப்பூட்டினார். சக போட்டியாளர்களின் டீ சர்ட்களைப் போட்டுக் கொண்டு, மக்கள் மனதில் இருந்த கேள்விகளையெல்லாம் கேட்டு விட்டனர். பிக் பாஸ் வீட்டில் நடந்த பல சுவாரஸ்யமான விசயங்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

மிஸ் பண்றோம் பாய்ஸ்

மிஸ் பண்றோம் பாய்ஸ்

அவர்களுக்குள்ளும் சிரித்து, நம்மளையும் சிரிக்க வைத்து, ‘சே நீங்க ரொம்ப மோசம் பிக் பாஸ். அதுக்குள்ள இந்த சீசனை முடிச்சுட்டீங்களே' என சொல்லும்படி இருந்தது நேற்றைய நிகழ்ச்சியில் பாய்ஸ் கேங்கின் கலாட்டாக்கள். நிஜமாகவே உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் பாய்ஸ் கேங். அடிக்கடி நிகழ்ச்சிக்காக இல்லாட்டியும் உங்கள் ரசிகர்களுக்காக இப்டி ஒண்ணா சேர்ந்து ஜாலியா வீடியோ போடுங்க பாய்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X