ஐ தெலுங்கு, ஹிந்தி இசை வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு
ஐ படத்தின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகளின் இசை வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இந்தப் படத்தின் தமிழ் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வந்து சிறப்பித்தார். ரஜினி வெளியிட்டார்.
அடுத்து இதன் இந்தி இசை வெளியீட்டு விழா மும்பையில் நடக்கிறது. வரும் டிசம்பர் 5-ம் தேதி விழா நடக்கிறது.
அதற்கடுத்த 5 நாட்கள் கழித்து டிசம்பர் 10-ம் தேதி தெலுங்குப் பதிப்பின் இசையை வெளியிடுகிறார்கள்.
இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் ஹாலிவுட் பிரபலங்கள் சில்வஸ்டர் ஸ்டெலோன் மற்றும் ஜாக்கி சான் பங்கேற்பார்கள் என முன்பு கூறிவந்தனர். வருவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படத்தை வரும் ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று வெளியிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications












