Operation Sindoor - தக் லைஃப் படக்குழு எடுத்திருக்கும் முடிவு.. கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் தக் லைஃப். அந்தப் படத்தில் அவருடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் ஐந்தாம் தேதி படமானது வெளியாகவிருக்கிறது. பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 16ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. ஷங்கர் இயக்கியிருந்த அந்தப் படம் தோல்வி என்பதை மட்டும் தாண்டி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தி நடிக்க கமிட்டானார் கமல். ஏற்கனவே இரண்டு பேரும் சேர்ந்து நாயகன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
படத்தில் சிம்பு: படத்தில் இன்னொரு சர்ப்ரைஸாக சிம்பு கமிட்டானார். முதன்முறையாக கமலுடன் இணைந்து சிம்பு நடிப்பதால் இரண்டு பேரும் ஸ்க்ரீனில் எந்த அளவுக்கு மாஸாக இருப்பார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் சிம்புவின் கெட்டப்பும் அருமையாக இருக்கிறது என்றும்; கண்டிப்பாக படத்தில் எஸ்டிஆர் சம்பவம் இருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செம காம்போ: மேலும் படத்திலிருந்து முதல் சிங்கிளான ஜிங்குச்சா சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில் சிம்புவும், கமலும் ஆடிய ஆட்டம் காண்போரை வெகுவாகவே ரசிக்க வைத்தது. அதனை பார்க்கையில் இந்தப் படத்தில் சிம்பு கமலுக்கு வில்லனா இல்லை மகனா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. படம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன.
16ஆம் தேதி இசை வெளியீட்டு விழா: சிம்பு, கமல், திரிஷா தொடர்ந்து அந்த பணிகளில் இப்போதே மும்முரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழாவிலேயே அறிவித்துவிட்டார்கள். எனவே அந்த நாளுக்காக கமல் மற்றும் சிம்புவின் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். இந்நிலையில் படத்தை தயாரித்திருக்கும் ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
Operation Sindoor: அதாவது காஷ்மீர் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து Operation Sindoor என்கிற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தானும் தனது தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலுமே பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
ஆடியோ ரிலீஸ் கேன்சல்: எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நிலைதான் இப்போதைக்கு இருக்கிறது. இதன் காரணமாக 16ஆம் தேதி நடக்கவிருந்த ஆடியோ வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்படுவதாக தக் லைஃப் படக்குழு அறிவித்திருக்கிறது. நமது இராணுவ வீரர்கள் எல்லையில் போராடிக்கொண்டிருக்கும்போது இது கொண்டாட்டத்துக்கான நேரம் இல்லை. விழா எப்போது நடக்கும் என்பது தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் நாடு முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அடுத்த வாரம் ரிலீஸுக்கு தயாராகவிருந்த படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதேபோல் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதுபோல்; திரையரங்குகளும் மூடப்படலாம் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











