புறநகர் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியை கலாய்த்த மன்சூர் அலிகான்

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் மன்சூர் அலிகான் சமீபத்தில் இவர் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டிருந்தார் .மன்சூர் அலிகான் பல விழாக்களில், நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது கருத்தை பகிர்வது வழக்கம் .இவரின் பல கருத்துகள் பல இடங்களில் சலசலப்பையே ஏற்படுத்தும் .

அதே போல நேற்று நடந்த புறநகர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான் படம் கட்டாயம் வெற்றி பெற வாழ்த்துகள் என கூறினார் .மேலும் தற்போதைய நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் ஓடுவதில்லை மக்கள் சிறிய பட்ஜெட் படங்களை கண்டுகொள்வதே இல்லை என வருத்தம் தெரிவித்தார் .

audio launch of the movie puranagar happened recently

மேலும் விழா மேடையில் பேசும் போது ஏன் மறைமுகமாக பேசுகிறீர்கள், நேரடியாக ரஜினிகாந்தை பற்றி தான் பேசுகிறோம் என்று கூறுங்கள் என்று கூறினார். இது அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது .ஏனெனில் விழாவில் மன்சூர் அலிகான் பேசும் முன் மறைமுகமாக பலரும் ரஜினிகாந்தை பற்றி பேசியிருந்தார்கள். இதனை கவனித்து கொண்டிருந்த மன்சூர் அலிகான் அவர்களின் மௌனத்தை போட்டுடைத்தார் .

மன்சூர் அலிகன் பல படங்களில் வில்லனாக நடித்து இருந்தாலும், அவர் நகைச்சுவை கலந்த வில்லன் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர் பல இடங்களில் நகைச்சுவை கலந்தே பேசுவார் இப்படி நேற்று நடைபெற்ற புறநகர் படத்தின் இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளினியின் உடையை நன்றாக கொசுவலை போல உடை அணிந்து வந்திருக்கிறீர்கள் கொசுவும் கடிக்காது பார்க்கவும் நல்லா இருக்கும் என கூறி கிண்டல் செய்தார் .

மன்சூர் அலிகான் சலசலப்பு நிறைந்த பேச்சுகளை விழாக்களின் போது அதிகம் பேசுபவர். இதனை போல நேற்றும் விழாவில் கட்டாயம் பேசுவார் என்று பத்திரிக்கையாளர்களால் எதிர்பார்க்கபட்டது. அதே போல இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் பயங்கரமான பேச்சுக்கு போயிர்லாமா என கேட்டார். விழாவிற்கு வந்த பத்திரிக்கையாளர்களும் கட்டாயம் மன்சூர்அலிகான் பெரிய அளவில் பேச போகிறார் நமக்கெல்லாம் தலைப்பு செய்தி தயாராகிவிட்டது என காத்திருந்தனர் .

ஆனால் நடந்ததே வேறு படம் கட்டாயம் வெற்றி பெறும் என்று கூறிய மன்சூர் அலிகான், சட்டென்று ஜனகனமன என்று தேசிய கீதத்தை பாட ஆரம்பித்தார். விழாவில் அமர்ந்திருந்த அனைவரும் குழம்பி போனார்கள். மன்சூர் அலிகான் தனது கைகளை காட்டி எழுந்திருயுங்கள் என்று கூறினார். உடனே அனைவரும் எழுந்து அவருடன் தேசிய கீதத்தை பாடினர். மன்சூர் அலிகான் பாடி முடித்ததும் அனைவருக்கும் நன்றி கூறி சட்டென்று கிளம்பிவிட்டார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X