விடுதலை ஆடியோ உரிமத்தை வாங்கிய சோனி மியூசிக்

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படம் விடுதலை. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

அதில் சூரி போலீஸ் உடையிலும், விஜய் சேதுபதி கையில் விலங்குடனும் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்ன ரோலில் நடிக்கிறார் என தெரியவில்லை.

audio rights of the movie Viduthalai have been lapped up by Sony Music

ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சூரி, வெற்றி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக உள்ளது.

அவர் என்னை கூப்பிட்டு கதை சொன்னதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது. என்னை வைத்து அவர் படம் இயக்க நினைத்ததே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் எலர்டு குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் காட்சிகள் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 1986 ல் சிவாஜி கணேசன், ரஜினி, விஷ்ணுவர்த்தன் நடித்த படத்திற்கு விடுதலை என்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள விடுதலை பட போஸ்டரில் சூரி ஹீரோ எனவும் விஜய் சேதுபதி கேரக்டரை வாத்தியார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வெற்றிமாறன் படத்திற்கு முதல் முறையாக இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சி அளித்துள்ளார். ஆர்.ராமர் எடிட்டிங்கை கவனித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X