ரசிகர்களே டிக்கெட் புக் பண்ணியாச்சா? தங்கலான், டிமான்டி காலனி 2 ப்ரீ புக்கிங் ஸ்டார்ட் ஆகியாச்சு!
சென்னை: விழாக்காலமோ அல்லது விடுமுறை தினங்கள் வார இறுதி நாட்களுடன் சேர்த்து வந்து விட்டால், சினிமா உலகினர் போட்டி போட்டுக்கொண்டு படத்தினை ரிலீஸ் செய்து விடுவார்கள். அப்படித்தான் அடுத்த வாரம் வியாழக்கிழமை 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் தமிழ் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் பல படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமா தரப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படங்களில் மிகவும் கவனத்தைப் பெற்ற படங்கள் என்றால் அது, தங்கலான் (Thangalaan), டிமான்டி காலனி 2 (Demante Colony 2) மற்றும் ரகு தாத்தா ஆகிய படங்கள்தான்.
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு இன்னும் நான்கு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், படக்குழுவினர் படத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல படத்தின் புரோமோசன் வேலைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தங்கலான் படக்குழுவினர் படத்தினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதால் படத்தினை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு செல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து படம் குறித்து பேசி வருகின்றனர். அதேபோல் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து படத்தினை புரோமோட் செய்து வருகின்றனர்.

தங்கலான்: தங்கலான் படத்தைப் பொறுத்தவரையில், சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் உடன், பார்வதி திருவேத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய காலகட்ட கதைக்களத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

டிமான்டி காலனி 2: தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் இந்த படம் , இயக்குநர் அஜய் ஞானமுத்து 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படம் மிகவும் எளிமையான ஒரு படமாக திரில்லர் ஜானரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதுதான்.

ப்ரீ புக்கிங்: இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு படங்களில் டிமான்டி காலனி 2 படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சினிமா உலகில் பேசப்படுவது, டிமான்டி காலனி 2 படத்தினை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகின்றது என்பதுதான். அதேபோல் தங்கலான் படத்தினைப் பொறுத்தவரை படம் தமிழ்நாட்டில் மட்டும் குறைந்தது 2000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் தனஞ்செயன் கூறினார். இது விக்ரம் மற்றும் தங்கலான் படத்தினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
தீவிரம்:இந்த இரண்டு படங்களுக்கான ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டதால், ரசிகர்கள் படத்தினைப் பார்க்க டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். அதேபோல், படம் ரிலீஸ் ஆக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருப்பதால் படக்குழுவினர் மிகத் தீவிரமாக படத்தினை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











