வைரலாகும் ஆகஸ்ட் 2 மீம்ஸ்.. சுயம்பு லிங்கம் குடும்பம் தியானத்துக்கு போனதை மறக்காத ரசிகர்கள்!
சென்னை: ஆகஸ்ட் 2ம் தேதியான இன்று நண்பர்கள் தினத்தை ஒரு பக்கம் நண்பர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, கமல் ரசிகர்கள் பாபநாசம் படத்தை வைத்து மீம் போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான படம் பாபநாசம்.
மலையாளத்தில் மோகன் லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம். பிற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

முக்கியமான நாள்
பாபநாசம் படத்தின் மையக் கருவாக ஆகஸ்ட் 2ம் தேதி இடம்பிடித்து இருக்கும். சுயம்பு லிங்கம் தனது குடும்பத்துடன் தியானத்துக்கு சென்றதாக பலரையும் ஏமாற்றி, கொலைப் பழியில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி இருப்பார். அந்த ஆகஸ்ட் 2ம் தேதி எப்படி கதை மாந்தர்களின் மனதில் பதிந்ததோ அதே போல பார்த்த ரசிகர்கள் மனங்களிலும் பதிந்துள்ளன.

வைரலாகும் மீம்ஸ்
கிட்டத்தட்ட பாபநாசம் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றும் ரசிகர்கள் ஆகஸ்ட் 2ம் தேதியை மீம் போட்டு, சுயம்பு லிங்கத்தையும் அவர்து குடும்பத்தையும் நினைக்க தவறவில்லை. ஏகப்பட்ட மீம்கள், மாஷப் வீடியோக்கள் சமூக வலைதளத்தில், பாபநாசம், திரிஷ்யம், படங்களை வைத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.

சுயம்பு லிங்கம் டே
சில ரசிகர்கள், ஒரு படி மேல் சென்று, #Aug2SuyambuLingamDay என்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி நடிகர் கமல் ஹாசனுக்கும் அதை டேக் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். கலை ரசனை மிகுந்த இது போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவை யாராலும் அசைக்க முடியாது என்பதே உண்மை.

இது இன்னும் சூப்பர்
நடிகர் விமலின் தேசிங்கு ராஜா படத்தில் சூரி பண்ணிய சிறப்பான காமெடி, பல மேட்டர்களுக்கு டெம்பிளேட் மீமாக வலம் வருகிறது. இந்நிலையில், என்ன நாள் ஞாபகம் இருக்கா? என்ற கேள்விக்கு, பிரண்ட்ஷிப் டே தான மாப்ள என்ற பதிலை சொல்லும் மாமாவிடம் இல்லை மாமா, இன்னைக்கு சுயம்பு லிங்கம் தியானத்துக்கு போன நாள் மாமா என சூரி சொல்லும் விதமாகவும் மீம்கள் பறக்கின்றன.

மீனா ட்வீட்
அட ரசிகர்கள் தான் இப்படி அலப்பறை பண்ணுகின்றனர் என்று பார்த்தால், நடிகை மீனா போட்டிருக்கும் இந்த ட்வீட் வேற லெவல். மோகன் லால், மீனா நடிப்பில் வெளியான ஒரிஜினல் வெர்ஷனான திரிஷ்யம் படக் காட்சியை பதிவிட்டு, இன்று ஆகஸ்ட் 2ம் தேதி, ஜியார்ஜ் குட்டி அவரது குடும்பத்துடன் தியானத்துக்கு சென்ற நாள் என்பதை அவரே பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











