பாக்ஸ் ஆஃபீஸ் பந்தயத்தில் வெற்றி கண்ட வாழை! சூரி படத்தின் நிலை இவ்வளவு மோசமாகிடுச்சே!
சென்னை: தமிழ் சினிமாவில் வாரத்திற்கு குறைந்தது மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றது. சில சமயங்களில் 10 படங்கள் வரை கூட ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த வகையில் இந்த வாரம் அதாவது ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில் மூன்று படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. அதாவது மாரி செல்வராஜ் இயக்த்தில் உருவான வாழை, சூரி மற்றும் அன்னா பென் நடித்து வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி. இதையடுத்து, விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள போகுமிடம் வெகுதூரமில்லை ஆகிய படங்கள்தான். இந்தப் படங்களில்ன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் மற்றும் இதில் எந்த படம் பாக்ஸ் ஆஃபீஸ் வின்னர் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வாழை படம் ஏற்கனவே மாரி செல்வராஜ் கூறியதைப்போல், தனது பால்யகாலத்தில் நடந்ததை படமாக உருவாக்கியுள்ளார். கொட்டுக்காளிப் படம் ஆணவக் கொலை குறித்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் என யாருமே இல்லை. மேலும் லைவ் சவுண்ட் முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், விமல் நடிப்பில் வெளியாகியுள்ள போகுமிடம் வெகுதூரமில்லை படமானது, வழக்கமான ஜனரஞ்சக சினிமாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றது. இதனால் இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்கள் ஆர்ட் சினிமா என ஆங்கிலத்தில் கூறப்படுவதைப் போல், உலக சினிமா ரசிகர்களுக்கான, படங்கள் ஆகும்.

இணையம் வளர்ந்த பின்னர் உலக சினிமாவைப் பார்த்துப் பழகிய தமிழ்நாடு ரசிகர்கள், அதிகமாக மலையாளத்தில் வெளிவரும் இயல்பான மற்றும் உண்மைக்கு மிகவும் நெருக்கமான படங்களைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆன மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக பாரட்டுகளைப் பெற்று வருகின்றது. இது போன்ற படங்களை தியேட்டருக்கு வந்து எந்த அளவிற்கு ரசிகர்கள் பார்க்கின்றனர் என்பதைப் பொறுத்துதான் இது போன்ற படங்களை தயாரிப்பாளர்கள் தயாரிக்க முன்வருவார்கள். தயாரிப்பாளர்களுக்கு படத்தின் வசூல் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபம்தான் இது போன்ற படங்களை தொடர்ந்து எடுக்க உந்துதலைக் கொடுக்கும்.

வசூல் நிலவரம்: மேலும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல், ஒரு படத்தின் வெற்றி என்பது வசூலை வைத்து தீர்மனிக்கும் நிலைக்கு சினிமா உலகம் வந்துவிட்டது. அந்தவகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் வசூலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 3.55 கோடிகளை வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

பின்னிலையில் சூரி: அதேபோல் தான் கதாநாயகனாக நடித்த முதல் இரண்டு படங்களிலும் வசூலில் வாகை சூடிய சூரி, இந்தப் படத்தில் கணிசமான வெற்றியைக் கூட பெறவில்லை. அதாவது கொட்டுக்காளி படம் முதல் இரண்டு நாட்களில், ஒரு கோடி கூட வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

பாக்ஸ் ஆஃபீஸ் வின்னர்: இந்தப் படங்களுக்கு அடுத்து, நடிகர் விமல் நடித்த போகுமிடம் வெகு தூரமில்லை படம்தான். இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்பது கொட்டுக்காளி படத்தை விடவும் குறைவு என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வரும் காலங்களில் கொட்டுக்காளி மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை படங்களின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது. இந்நிலையில் இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் அஃபீஸ் வின்னர் என்றால் அது மாரி செல்வராஜின் வாழை படம்தான்.



Click it and Unblock the Notifications











