அந்தகன் சோலோ ரிலீஸ் இல்லையா? போட்டிக்கு நிற்கும் 7 படங்கள்.. விவரம் இதோ

சென்னை: இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவுக்கு என்று எப்போதும் ஒரு மார்க்கெட் உண்டு. நூறு கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்யும் படங்கள் ரிலீஸ் ஆவது ஒரு புறம், நல்ல படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு ஒரு புறம், கதாநாயக பிம்பத்தை மைய்யப்படுத்தி உருவாக்கப்படும் படங்கள் ஒரு புறம் என ஆண்டுக்கு குறைந்தது 200இல் இருந்து 300 படங்கள் வரையிலும் கூட ரிலீஸ் ஆகின்றது.

மொத்தம் உள்ள 52 வாரங்கள், விழாக்காலங்கள் என ஆண்டுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்த 100 நாட்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு படங்கள் தொடங்கி, அதிகபட்சம் நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸ் ஆகின்றது. சில சமயங்களில் ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகியுள்ளது.

Andhagan Minmini

புதிதாக தமிழ் சினிமாவில் கால் பதித்த அனுபவமில்லாத புதிய தயாரிப்பாளர்கள் சரியான கதைத் தேர்வினால் இமயத்தை தொட்டுள்ளனர். அதேபோல் பல நூற்றுக்கணக்கான கோடிகளை தவறான கதையின் மீது கொட்டி கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களும் இருக்கின்றார்கள். இதே நிலைதான் இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும். இந்நிலையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

1.அந்தகன்: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

2. மின்மினி: சில்லுகருப்பட்டி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். இவர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள மின்மினி படத்தினைஆங்கர் பே ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு 7 வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அந்த ஆண்டே மொத்தப் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. இது திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமுயற்சியாகும் இது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா இசை அமைத்துள்ளார்.

Andhagan Minmini

3. P2 (இருவர்): தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மனோஜ், தமிழில் அறிமுகமாகும் படம். இந்தப் படத்தினை சிவம் கதை திரைகதை எழுதி இயக்கியுள்ளார். படத்தில் இளவரசு, ராஜ சிம்மன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்து கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். பேயை மைய்யப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படமும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

4. லைட் ஹவுஸ்: ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் அனந்த் நாக், வித்யா பிரதீப், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த லைட் ஹவுஸ் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் வடிவில் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்தப் படம் லைட் ஹவுஸை மைய்யப்படுத்தி மிகவும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சென்சார் போர்ட் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

5. கவுண்டம் பாளையம்: நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள படம் கவுண்டம்பாளையம். படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படம் குறித்த சலசலப்பு நிலவி வந்தது. இந்நிலையில் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை வெளியிட திரைப்பட உரிமையாளர்கள் அஞ்சுவதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் பின்னர், படத்தினை ரிலீஸ் செய்யும் தியேட்டர்களுக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Andhagan Minmini

6. வீராயி மக்கள்: நாகராஜ் கருப்பைய்யா இயக்கத்தில் வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம்வீராயி மக்கள். கூட்டுக்குடும்பமாக வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படம் விளக்குகின்றது. எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்துள்ள வீராயி மக்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

7. சூரியனும் சூரியகாந்தியும்: ஏ.எல். ராஜா எழுதி இயக்கியுள்ள சூரியனும் சூரியகாந்தியும் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் அப்புக்குட்டி, சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புது முக நடிகர்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் கிராம கதைக்களத்தை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Andhagan Minmini

8. பார்க்: ஒரு நொடி' என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் மூலம் அறிமுகமான தமன்குமார் பார்க் படத்தில் கதாநாயகான நடித்துள்ளார். இந்தப் படத்தினை இ.கே. முருகன் இயக்கியுள்ளார். ஹாரர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படமும் இன்று வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X