‘கல்கி 2898 AD’ மகத்தான வெற்றி.. இனி பிரபாஸ் நினைத்ததெல்லாம் நடக்கும்.. அத்தை சொன்ன ஹேப்பி நியூஸ்!
சென்னை: கல்கி 2898 ஏடி படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கும் அதிமாக வசூலாகி உள்ளது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள இந்த படத்தை பாராட்டி உள்ள பிரபாஸின் அத்தை, நன்மை ஒரு மனிதனை எந்த அளவிற்கு அழைத்து செல்லும் என்பதை கல்கி படம் தெளிவாக காட்டியிருக்கிறது. இனி பிரபாஸ் நினைத்தது எல்லாம் நடக்கும் என்றார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம்,கன்னடம் என பல மொழியில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கல்கி 2898 ஏடி: மகாபாரதப் போரில் கெளரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து போரிடுகிறார் த்ரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமா. தன் மிகப்பெரிய ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை வைத்து பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தையை வயிற்றிலேயே கொல்கிறார். கோபமடைந்த கிருஷ்ணன் அஸ்வத்தாமா(அமிதாப்பச்சன்) சாகாவரத்தை தண்டனையாக வழங்குகிறார். கலியுகத்தில் கிருஷ்ணன் மீண்டும் அவதாரம் எடுக்கும்போது அஸ்வத்தாமா காப்பாற்றினால் மட்டுமே தனது இந்த சாபத்தில் இருந்து அவர் மீள முடியும். இதனால் கிருஷ்ணன் அவதாரத்திற்காக காத்திருக்கிறார். இதில் இருந்து தான் கல்கி கதை தொடங்குகிறது.
11 நாளில் 900 வசூல்: ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியை வசூலித்தது. தற்போது படம் வெளியாகி 11 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.900 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் விரைவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பார்த்த பலரும் பிரபாஸின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பிரபாஸ் அவ்வளவுதான்: இந்நிலையில், கல்கி படம் பார்த்த மறைந்த நடிகர் கிருஷ்ணம் ராஜுவின் மனைவியும் பிரபாஸின் அத்தையுமான ஷ்யாமளா தேவி, நன்மை ஒரு மனிதனை எந்த அளவிற்கு அழைத்து செல்லும் என்பதை கல்கி படம் தெளிவாக காட்டியிருக்கிறது. பலரும் பாகுபாலி படத்திற்கு பிறகு பிரபாஸ் எந்த படத்திலும் இனி ஹிட் கொடுக்கமாட்டார் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அவர்கள் பேசிய பேச்சுக்களை கல்கி படத்தின் வெற்றி தவிடுபொடியாக்கி உள்ளது.
நினைத்தது எல்லாம் நடக்கும்: பிரபாஸ் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார். அதேபோல் தான் பிரபாஸின் திருமணமும், அதற்கான நேரம் வரும் கூடியவிரைவில் வரும், அதற்காக தான் காத்திருக்கிறோம். மற்றதெல்லாம் கிருஷ்ணர் மேலே இருந்து பார்த்துக்கொள்வார். இதுவரை பிரபாஸ் நினைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நடந்துள்ளது, அது போல்தான் திருமணமும் நடக்கும் என்றார்.
கைவசம் உள்ள படம்: கல்கி படத்தை தொடர்ந்து, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் நடித்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். ஹாரர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.250 கோடிகள் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை, இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து 'தி ராஜா சாப்'படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











