பாட்டா இல்ல பிட்டு படமா? எல்லை மீறி நடித்த பிக் பாஸ் பிரபலம் அரோரா சின்கிளேர்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு, இரட்டை அர்த்த வசனங்களை பேசி பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர். பலூன் அக்கா என்ற அடைமொழியுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அரோரா அந்த நிகழ்ச்சியின் ஏராளமானோரின் மனதை வெற்றார். தற்போது அரோராவின் புது ஆல்பம் ஒன்று வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிகளில் 21 போட்டியாளர்களில் ஒருவராக வந்தவர் தான் அரோரா சின்கிளேர். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்தே சரியாக விளையாடவில்லை என்றும், துஷாருடன் நெருங்கி பழகுகிறார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க தகுதியே இல்லை என பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நாட்கள் செல்ல செல்ல விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கிய அரோரா, வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அவற்றுக்கு நேர்மையான முறையில் பதில் அளித்தார்.

பிக் பாஸ் அரோரா: கம்ருதீனுடன் சண்டை ஏற்பட்ட போதும், அவரை பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட பேசாமல் நட்புக்கு மரியாதை கொடுத்தார். இந்த பண்பை அவரை ஃபைனல் வரை கொண்டு சென்றது. டைட்டில் வின்னராக அரோரா தான் வருவார் என சொல்லும் அளவிற்கு அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். ஆனால் ஃபைனல் வரை சென்று நான்காவது இடத்தை பிடித்தார். இதையடுத்து, பிக் பாஸ் பணத்தை வைத்து வெளிநாட்டில் படிக்க செல்வதாக கூறியிருந்தார். படிக்க வேண்டும் என்பது தான் எனது நீண்ட நாள், அந்த கனவை அடையும் நேரம் வந்துவிட்டது என்றார்.
பிட்டு படமா?: இந்நிலையில், அரோராவின் 'ரோஸ் இல்லனா ஜாக்' என்கிற ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், அரோரா படு கவர்ச்சியான உடையில், படுக்கை அறை காட்சி, லிப் லாக் என இறங்கி நடித்துள்ளார். இந்த பாடல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இதைப் பாத்தா சாங் மாதிரி தெரியல பிட்டு படம் மாதிரி தெரிகிறது என்றும் இந்த வீடியோவை துஷார் பார்த்து எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











