மழை நாள் இரவில் பிரபல இயக்குநருக்கு நடந்த மறக்க முடியாத சம்பவம்
மும்பை: ஆட்டோ டிரைவரின் சுயநலம் இல்லா செயலால் பிரபல பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி நெகிழ்ந்துவிட்டார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் மழை பெய்தால் அங்கு உள்ள மக்கள் சந்தோஷப்படுவதற்கு பதில் பயப்படும் நிலையாக உள்ளது.

இந்நிலையில் இம்தியாஸ் அலி ஒரு மழை நாள் இரவு தன் வாழ்வில் நடந்த சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தபோது நடந்து சென்றேன். ஒரு ஆட்டோ வந்து என் அருகே நின்றது. சவாரிக்கு வருகிறீர்களா என்று டிரைவர் கேட்டார். வேண்டாம் என்று நான் கூறியும் டிரைவர் மீண்டும் கேட்டார். மழை பெய்து கொண்டிருந்தது, என் கையில் குடை இல்லை. பர்ஸை எடுத்து பார்த்தால் பணம் இல்லை. இதையடுத்து என்னிடம் பணம் இல்லை என்று டிரைவரிடம் கூறினேன்.
அதற்கு அவரோ வந்து உட்காருங்க சார், பணம் வாங்காமல் உங்களை நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். வேண்டாம், வேறு யாரையாவது அழைத்துச் செல்லவும் என்று நான் கூறினேன். டிரைவரோ, மழை பெய்கிறது, நனைந்துவிடுவீர்கள், வாங்க நான் டிராப் செய்கிறேன் என்று கூறினார்.
அவர் பேச்சை கேட்டு ஆட்டோவில் ஏறினேன். ஒரு கார் அந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது. அந்த காரில் இருந்த தம்பதி என்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பினார்கள். உடனே ஆட்டோ டிரைவர் என்னை பார்து நீங்க இம்தியாஸ் அலியா என்று கேட்டார். எனக்கும் உங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றார் டிரைவர்.
நானோ, எனக்கு உங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறினேன் என இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications