ஆட்டோகிராப் பார்ட் 2 நிச்சயம் வரும்... சேரன் அறிவிப்பு!!
சென்னை: பெரும் வெற்றி பெற்ற ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார்.
இயக்குநர் சேரன் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்கி நடித்த படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் மனிதன் தனது 3 பருவத்தில் சந்திக்கும் காதலை அற்புதமாக திரையிட்டு காட்டியிருப்பார் சேரன்.
இந்த படம் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை தொடுவதாக அமைந்திருக்கும். அதன் காரணத்தினாலேயே ஆட்டோகிராப் படம் பெரும் வெற்றி பெற்றது.

ஒவ்வொரு பூக்களுமே..
இந்த படத்தில் மலையாக நடிகை கோபிகா கதாநாயகியாக அறிமுகமானார். சினேகா, மல்லிகா ஆகியோரும் நடித்து இருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே' பாடல் தேசிய விருது பெற்றது.

காலர் ட்யூன்
இந்த பாடல் பலரின் காலர் ட்யூனாகவும் ரிங்டோனாகவும் இருந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே பாடலுக்கும் வரவேற்பு கிடைத்தது.

ரசிகர் கேள்வி
இந்நிலையில் ஆட்டோகிராப் 2-ம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் சேரன் அறிவித்து உள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆட்டோகிராப்-2 படத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று சேரனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

விரைவில்
அதற்கு பதில் அளித்த சேரன் கண்டிப்பாக வரும் என்று கூறியுள்ளார். இந்த படத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம்
ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, கலகலப்பு, சண்டக்கோழி, திருட்டுப்பயலே உள்பட பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்து வெற்றி பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பில்லாமல் இருந்த சேரன் அண்மையில் திருமணம் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











