அதிர்ச்சி.. 'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்' ஆட்டோகிராஃப் பாடகர் கோமகன் கொரோனாவால் மரணம்!
சென்னை: ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் கோமகன் கொரோனாவால் மரணமடைந்தார்.
Recommended Video
கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்தப் படத்தில் ஸ்னேகா, கோபிகா, மல்லிகா, என பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடலில் இடம்பெற்ற மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் என்ற வரிகளை பாடி புகழ் பெற்றவர் பாடகர் கோமகன்.

பார்வை குறைபாடு
இப்பாடலில் நடித்த கோமகன் அந்த வரிகளை கடைசியில் உணர்வுபூர்வமாக பாடி கலங்குவார். அவரது நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது. பிறவியிலேயே பார்வை குறைபாடு உள்ள கோமகன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை பூர்விகமாக கொண்டவர்.

கலைமாமணி விருது
சிறு வயதில் இருந்தே நன்றாக பாடும் திறன் கொண்ட கோமகன், கோமகனின் ராகப்ரியா என்ற இசைக்குழுவையும் நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார் கோமகன்.

மீண்டும் பணியில்..
கோமகன் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை கிடைத்தது. கொரோனா முதல் அலையின் போது வீட்டில் இருந்து வேலை பார்த்த வந்த கோமகன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் மீண்டும் பணிக்கு சென்றார்.

நள்ளிரவு மரணம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கோமகன். 50 சதவீத பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமகன், நள்ளிரவு 1 மணிக்கு கொரோனா தொற்றால் காலமானார்.

திரைத்துறையினர் அதிர்ச்சி
மறைந்த பாடகர் கோமகனுக்கு அனிதா என்ற மனைவியும் மோனஸ், மோவின் என்ற இரு மகன்களும் உள்ளனர். அவரது மறைவு தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications