»   »  பாடமாகும் பாட்டு!

பாடமாகும் பாட்டு!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா இளைஞர்களைக் கெடுக்கிறது, சீரழிக்கிறது, தவறான பாதையில் கொண்டு போகிறது என்று ரொம்ப காலமாகவேஒருபக்கம் குரல்கள் ஒலித்துக் கொண்டு உள்ளன.

ஆனால் அதே தமிழ் சினிமாவில் இடம் பெற்ற ஒரு பாடல் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக கூறிஅந்தப் பாடலை தனது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? உண்மைதான். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் முதல் தாள் பாடத் திட்டத்தில்ஆட்டோகிராப் படத்தில் வரும் பிரபலமான "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" பாடல் இடம் பெற்றுள்ளது.

செய்யுள் திரட்டு என்ற தலைப்பிலான பிரிவில் இடம்பெற்றுள்ள 50 கவிதைகளில் ஒவ்வொரு பூக்களும் பாட்டும் இடம்பெற்றுள்ளது. எதற்காக சினிமாப் பாடலை பாடத்தில் சேர்த்துள்ளீர்கள் என்று தமிழ்த் துறை தலைவர் மோகனிடம் கேட்டபோது,

இந்த பாடல் சினிமாவில் இடம் பெற்றுள்ளது என்றாலும் கூட, சுய நம்பிக்கை, கொள்கையை அடைய வெறியுடன் உழைக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட நல்ல கருத்துக்கள் இந்தப் பாடலில் உள்ளது.

ஒரு இளைஞன் எப்படியிருக்க வேண்டும், போராட்டங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை வலியுறுத்துவதாகஇந்தப் பாடல் இருந்ததால் அதை பாடத் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்தோம் என்கிறார் மோகன். இந்தப் பாடலை எழுதியவர்பா.விஜய்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 84 கல்லூரிகளில் தமிழ் முதல் தாளில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது.இப்பாடலை பாடத் திட்டத்தில் சேர்க்க பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட்டும் அனுமதி அளித்து விட்டது.

வெள்ளித் திரை மூலம் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த இந்தப் பாட்டு இனிமேல் வகுப்பறைகளிலும் ஒலிக்கப் போகிறது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil