’அவன் இவன்’ புகழ் குணசித்திர நடிகர் ராமராஜ் காலமானார்.. திரையுலகில் தொடரும் சோகம்!
சென்னை: குணசித்திர நடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
இயக்குநர் பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராமராஜ்.
கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேங்க் மேனேஜர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இயக்குநர் பாலா, இவரது எதார்த்தமான குரல் வளத்தையும் முக பாவனையையும் பார்த்து அவன் இவன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

இயக்குநர் பாலா
சேது, நான் கடவுள், பிதாமகன், அவன் இவன், பரதேசி, தார தப்பட்டை என பல படங்களை இயக்கி உள்ள இயக்குநர் பாலா படப்பிடிப்புக்கு செல்லும் இடத்தில் உள்ள மக்களையும் சில காட்சிகளை நடிக்க வைத்து விடுவார். அப்படி கிடைத்த ஒரு நடிகர் தான் ராமராஜ் என்கின்றனர். அவன் இவன் படத்தில் வாக்கி டாக்கியை ஆர்யா எடுத்து வந்த பிறகு நடக்கும் கும்பிடுறேன் சாமி காமெடி காட்சியை இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது.

ராமராஜ் காலமானார்
கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் காமராஜ் மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தொடர்ந்து மூத்த நடிகர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து வரும் சோகமான செய்தி அதிகரித்து வருகிறது.

நகைச்சுவை நடிகர்கள் மரணம்
அதே போல ஏகப்பட்ட சினிமா நடிகர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காமெடி நடிகர்கள் விவேக், பாண்டு உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை நடிகர்களை சமீப காலமாக திரையுலகம் இழந்து வரும் நிலையில், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் ராமராஜும் உயிரிழந்துள்ளது பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











