அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் ஃபர்ஸ் சிங்கிள் ‘ஹேண்ட்ஸ் அப்’ வீடியோ ரிலீஸ்!
சென்னை: கே.ஜி.எஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கன்னட திரைப்படங்களுக்கும் தமிழில் மவுசு கூடியுள்ளது.
அண்மையில் கன்னடத்தில் வெளியான குருக்ஷேத்ரம் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசானது.

இந்நிலையில், அடுத்த வரவாக ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா படம் விரைவில் திரைக்கு வருகிறது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ஹேண்ட்ஸ் அப்' பாடல் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் சச்சின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு திரைக்கதையை ஹீரோ ரக்ஷித் ஷெட்டியே எழுதியுள்ளார்.
அஜானிஷ் லோகநாத் மற்றும் சரண் ராஜ் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'ஹேண்ட்ஸ் அப்' பாடல் வீடியோ தற்போது, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஹேண்ட்ஸ் அப் பாடலுக்கு தமிழ் வரிகளை மெர்சல், பிகில், தர்பார் படங்களுக்கு பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் அட்டகாசமான வரிகளை போட்டு எழுதியுள்ளார்.
கெளதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் யூடியூப் சேனலில் இந்த பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கே.ஜி.எஃப் படத்தை தொடர்ந்து கன்னட திரைப்படமான அவனே ஸ்ரீமன் நாராயணா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளார். அண்மையில் ரிலீசான படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
கே.ஜி.எஃப் படம் அளவிற்கு இந்த படமும் தரமாக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











