3500 கோடி பட்ஜெட் அவதார் 3.. இந்தியாவில் இதுவரை செய்த வசூல் இத்தனை கோடி தானா?.. துரந்தரிடம் காலி!

சென்னை: சுமார் 400 மில்லியன் டாலர் (3500 கோடி ரூபாய்) எனும் மெகா பட்ஜெட்டில் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இயக்கிய அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் இந்தியாவில் நல்ல ஓபனிங்கை பெற்றது. ஆனால், அதன் முந்தைய பாகங்கள் அளவுக்கு ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை என்பது தான் படத்தின் வசூல் குறைய காரணம்.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் 3வது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 38 கோடி வசூல் செய்து மிரட்டிய நிலையில், அவதார் 3 படத்தால் துரந்தரிடம் பெரிதாக போட்டிப் போட முடியவில்லை.

Avatar Fire and Ash Day 4 Box Office Tamil Nadu India and Worldwide Collection reports are here
Photo Credit:

அவதார் படத்தின் இந்திய வசூல் மற்றும் அதன் தமிழ் வெர்ஷன் எந்தளவுக்கு வசூல் ஈட்டியது என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

கலவையான விமர்சனங்கள்: ஜேம்ஸ் கேமரூனிடம் அவதார் 4 படம் எப்போது வெளியாகும் என்கிற கேள்வியை கேட்ட நிலையில், இப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளேன். அதற்குள் அடுத்த குழந்தை எப்ப்போது என்று கேட்டால் எப்படி? என பதில் அளித்துள்ளார். உலகளவில் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறையை நம்பித்தான் அவதார் 3 படத்தின் வசூல் உள்ளதாக கூறுகின்றனர். அவதார் 2 படத்தையே மீண்டும் பார்த்தது போல உள்ளது என பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த நிலையில், மக்கள் அவதார் 3ம் பாகமான ஃபயர் அண்ட் ஆஷ் படத்தை பெரிதாக கொண்டாடவில்லை.

இந்தியாவில் அவதார் 3 வசூல்: ஜேம்ஸ் கேமரூன் இந்த முறை ஃபயர் அண்ட் ஆஷ் வில்லியான வாரங்கை ரொம்பவே நம்பி இந்த படத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த கதாபாத்திரம் திரையில் மிரட்டினாலும், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இந்நிலையில், அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் இந்தியாவில் இதுவரை 75.75 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது என்றும் முதல் வாரத்தில் 100 கோடி வசூலை கடக்கவில்லை எனக் கூறுகின்றனர்.

தமிழ் வெர்ஷன் மற்றும் உலக வசூல்: அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் கடந்த வாரம் வெளியான தமிழ் படங்களை விட நல்ல வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை 10 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டிலேயே இந்த படம் அள்ளியுள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் அதிகபட்சமாக 3000 கோடி (345 மில்லியன் டாலர்) வசூலை ஈட்டியுள்ளதாக டெட்லைன் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X