Avatar 3 Public Review: அவதார் 3 பப்ளிக் விமர்சனம்.. நம்பி வாங்க விஷுவல் ட்ரீட் உறுதி
சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ். இந்த படம் இன்று அதாவது டிசம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உள்ளது. படம் உலகின் பல்வேறு நகரங்களில் நேற்று இரவே பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளார்கள்.
ரசிகர் ஒருவர் கூறும்போது, " அவதார் 2வது பாகம் கொஞ்சம் போர் அடிக்கும். ஆனால் மூன்றாவது பாகம் பார்ப்பதற்கு ரொம்பவும் நன்றாக உள்ளது. படம் போர் அடிக்கவே இல்லை. முதல் பாதியில் விஷுவல்கள் சிறப்பாக உள்ளது. படம் ரொம்பவும் பிடித்துள்ளது. பல இடங்களில் எமோஷன்ஸ் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அனைத்து வயதினரும் பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.
அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, படம் விஷுவலாக நன்றாக உள்ளது. ஆனால் போர் அடிக்கிறது. நாம் ஏற்கனவே அவதார் படத்தில் அவதார்கள், நாவிகள் குறித்து எல்லாம் பார்த்துவிட்டோம். இந்த படத்தில் மீண்டும் அவர்களை விவரிக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது போர் அடிக்கிறது. படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஐமேக்ஸில் நன்றாக இருக்கும்: மற்றொரு ரசிகர் கூறும்போது, படத்தில் வாவ் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை. படத்தில் சில சொதப்பல்கள் உள்ளது. தமிழ் டப்பிங்கில் பார்க்கும்போது படம் நன்றாக உள்ளது. கொஞ்சம் நகைச்சுவையாக டப்பிங் செய்துள்ளார்கள். ஐமேக்ஸில் பார்ப்பதற்கு படம் பட்டாசாக இருக்கும். மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்தார்.
கிரிஞ் டயலாக்: இன்னொரு ரசிகர் கூறும்போது, படம் நன்றாக உள்ளது. தண்ணீருக்கு பதிலாக தீ இருப்பது நன்றாக உள்ளது. அதேபோல், ஏவாவின் முகத்தை காட்டும் காட்சி நன்றாக இருந்தது. படம் விஷுவல் ட்ரீட். இரண்டாம் பாகத்தில் எடுத்தவை தான் மீண்டும் இந்த படத்திலும் எடுத்து வைத்துள்ளார்கள். சில டயலாக்குகள் கிரிஞ்சாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், ஹாலிவுட் படத்தில் எப்போதும் இடைவேளை என்று ஒன்று கிடையாது. இவர்களாகவே பார்த்து விடுவதுதானே, அந்த இடமும் நன்றாக இல்லை" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











