Avatar Fire and Ash Trailer: உன் தெய்வத்துக்கு ஒரு சக்தியும் இல்லை.. அவதார் 3ம் பாகம் டிரைலர் எப்படி?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 3ம் பாகம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், அதன் டிரைலர் வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
2009ம் ஆண்டு வெளியான அவதார் முதல் பாகம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அதற்கு முன்பு வரை உலகளவில் அதிக வசூல் செய்த படமாக இருந்த ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தை அவதார் படம் வசூல் ரீதியாக முறியடித்தது.

இந்திய மதிப்பில் சுமார் 25 ஆயிரம் கோடி வசூல் அள்ளிய படமாக அவதார் மாறியது. அந்த படத்தின் வசூலை பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரூசோ பிரதர்ஸின் அட்வெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு முறியடித்தது வரலாறு.
அவதார் 3ம் பாகம் ரெடி: 2009க்குப் பிறகு 2022ம் ஆண்டு அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வெளியிட்டார். அந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், அதே சமயம் ஏகப்பட்ட விமர்சனங்களும் படத்தின் மீது வந்து விழுந்தது. இந்நிலையில், அவதார் 3ம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்: அவதார் 3ம் பாகம் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் எனும் பெயரில் உருவாகி இருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் அவதாரை தாண்டி வேறு ஏதாவது உலகத்தை ரசிகர்களுக்கு காட்டுவார் என பலரும் எதிர்பார்த்தாலும், அவர் இன்னும் அவதார் 4 மற்றும் 5 என பேண்டோரா உலகத்தையே விரிவடைய செய்யும் முயற்சியில் மட்டுமே தன்னை ஈடுபடுத்தி வருகிறார். புதிய புதிய உயிரினங்களையும் போர்களையும் அந்த உலகத்தில் அவர் உருவாக்கி வருவது பார்க்க பிரம்மாண்டமாக இருந்தாலும், புதுசா இல்லையே பாஸ் என்கிற ஃபீல் வரத்தான் செய்கிறது.
உன் தெய்வத்துக்கு ஒரு சக்தியும் இல்லை: அவதார் திரைப்படத்தில் பேண்டோராவில் இருக்கும் இயற்கை சக்திக்கும் இறை சக்திக்கும் சம்பந்தம் இருப்பது போன்றே கதைகள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கூடு விட்டு கூடு பாய வைத்து ஹீரோவையே அவங்க ஆட்களாக மாற்றி விடுவார்கள். ஹீரோவின் மகள் ஒருத்திக்கும் தெய்வ சக்தி இருப்பது போல காட்டிக் கொண்டு வரும் நிலையில், அந்த பெண்ணை வில்லி பிடித்து வைத்துக் கொண்டு "உன் தெய்வத்துக்கு ஒரு சக்தியும் இல்லை" என சொல்லும் காட்சிகள் டிரைலரில் அதகளமாக உள்ளது. இந்த முறை பூமியில் இருந்து வரும் மனிதர்களை தாண்டி அந்த இடத்திலேயே வேறு இன மக்களும் வில்லன்களாக மாற அவர்களுடன் தனது குடும்பத்துடன் ஜேக் சுலிவன் போடும் சண்டை என்ன ஆகிறது என்பது தான் கதையாக உள்ளது தெரிகிறது. வரும் டிசம்பர் 19ம் தேதி அவதார் பிரியர்களுக்கான அல்டிமேட் விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், நியூ இயர் என ஒட்டுமொத்த விடுமுறை வசூலையும் படம் அள்ளிவிடும்.


Click it and Unblock the Notifications











