Zoe Saldana topless: ஆத்தி.. அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட அவதார் ஹீரோயின்.. என்ன காரணம் தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: அவதார் படத்தின் அட்டகாசமான ஹீரோயின் ஜோ சல்டானா அரை நிர்வாண கோலத்தில் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
அவதார், அவெஞ்சர்ஸ் என ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களில் நடித்து அசத்தியவர் ஜோ சல்டானா.
வீக்கெண்ட் அதுவுமா இப்படி ஜோ சல்டானா அரை நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று செல்ஃபி எடுத்தபடி ஏன் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

அவதார் ஹீரோயின்: 2000ம் ஆண்டு வெளியான சென்டர் ஸ்டேஜ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜோ சல்டானா 2009ல் வெளியான அவதார் படத்தில் நெய்த்ரி எனும் கதாபாத்திரத்தில் நாவி இன பெண்ணாகவே நடித்திருந்தார்.
புதிய தொழில்நுட்பத்தில் ஜோ சல்டானாவின் முகமே தெரியவில்லை என்றாலும், அவரது அபார நடிப்பால் ஒட்டுமொத்த உலக ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
அவெஞ்சர்ஸ் படங்களிலும்: கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தில் கமோரா கதாபாத்திரத்தில் நடித்த ஜோ சல்டானா அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி, எண்ட்கேம் உள்ளிட்ட படங்களிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார்.
கடந்த ஆண்டு வெளியான அவதார் 2 படத்தின் மூலம் மீண்டும் மிரட்டிய ஜோ சல்டானா அவதார் 3 மற்றும் 4 பாகங்களிலும் நெய்த்ரியாக நடித்துள்ளார்.
அரை நிர்வாண வீடியோ: 44 வயதாகும் நடிகை ஜோ சல்டானா தொடர்ந்து லீடு ரோலில் நடித்து வருகிறார். தனது இளம் வயதிலேயே டெம்ப்டேஷன், டர்ட்டி டீட்ஸ், ஆஃப்டர் செக்ஸ் உள்ளிட்ட செம ஹாட்டான படங்களில் நிர்வாண கோலத்திலேயே நடித்துள்ள ஜோ சல்டானா திடீரென தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு டாப்லெஸ் வீடியோ ஒன்றை போட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு டாட்டூ டைம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
டாட்டூ போட்டதை காட்ட: தனது மார்பகத்தின் கீழே டாட்டு குத்தியுள்ள நிலையில், அதனை ரசிகர்களுக்கு காண்பிக்கும் நோக்கத்தில் இப்படியொரு டாப்லெஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
சைடு போஸ் மற்றும் ஃப்ரன்ட் போஸை அப்படியே அப்பட்டமாக காட்டியபடி அரை நிர்வாணமாக அவதார் நடிகை இருக்கும் வீடியோ உலகளவில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











