Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அவதார் ரீ ரிலீஸ்..பாக்ஸ் ஆபிஸில் அதகளம்.. வாரிக்குவிக்கும் கலெக்ஷன்!
வாஷிங்டன் : ஐநாக்ஸ், 3 டி தொழில் நுட்பத்தில் மீண்டும் வெளியான அவதார் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவதார் படத்தை கேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.
செல்வராகவனின் பகாசூரன்..என் அப்பன் அல்லவா..என் தாயும் அல்லவா..இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்!
வசூலை வாரிக்குவித்த படம்
டைட்டானிக், தி டெர்மினேட்டர் மற்றும் டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மென்ட் டே போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரித்த கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் 1500 கோடி ரூபாய் அளவில் அவதார் திரைப்படத்தை இயக்கி இருந்தார். தனி உலகத்தில் வாழும் அவதார்களை கண்காணிக்க அனுப்பப்படும் ஹீரோ அவர்கள் இடத்தை ஆக்கிரமிப்பதை எதிர்த்து அவதார்களுடன் சேர்ந்து வெல்வதே கதை. இப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்களுக்கான மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது.
அவதார் ரீ ரிலீஸ்
செப்டம்பர் 23-ந்தேதி அவதார் முதல் பாகம் மீண்டும் ஐமேக்ஸ், டால்பி வசதியுடன் திரையில் மீண்டும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பிரான்ஸ், கொரியா, சவூதி அரேபியா, பெல்ஜியம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதன் மொத்த வருவாய் 87 ஆயிரம் டாலராக இருந்துள்ளது.
வசூல் அதிகரிக்கும்
இந்தியாவில் இத்திரைப்படம் ரூ 1.85 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது மற்ற புதிய படங்களை விட சாதாரண விலையில் அதிக திரையரங்களில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் படம் அதிக வருவாயை ஈட்டி உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இதன் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.
அவதார் 2
டிசம்பர் 16ம் தேதி "அவதார் 2" வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வைரலாக இருந்து வருகிறது. 24 மணி நேரத்தில் 148 மில்லியன் பார்வைகளை அவதார் 2 டீசர் பெற்றது.