அசுர வேட்டையாடும் அவதார் 2...ரூ.8000 கோடி வசூல்...வியந்து போன திரையுலகம்!
சென்னை : ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலக அளவில் 8 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது.
2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16ந் தேதி திரையரங்கில் வெளியானது.
160 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது

அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர்
அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த விஷூவல் மயக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை. நாவி இன மக்களுக்கும், தனது குடும்பத்திற்கும் தலைவனாக வாழ்ந்து வருகிறான் ஜேக் சல்லி. ஒமாட்டிகாயா மக்களுக்கும் பாண்டோராவை ஆக்கிரமிக்க வந்த மனிதர்களுக்கும் இடையேயான போர் நடந்து பல ஆண்டுகளுக்கு பின் கதை நகர்கிறது. இராணுவத் தலைவனாக , படத்தின் வில்லனாக வந்த குவாட்ரிச், அவதாராக மாறி ஜேக் சல்லியை அழிக்க திட்டமிடுகிறான்.

குடும்பத்தினர் தப்பித்தார்களா?
ஜேக் சுலி தங்கள் குழந்தைகளை காப்பாற்ற மெட்கைனா இன மக்கள் வாழும் கடல் பகுதிகளுக்கு சென்று தஞ்சமடைகிறான். அங்கேயும் குவாட்ரிச் வந்து அட்டகாசம் செய்து ஜேக் சுலியின் குழந்தைகளை கடத்தி மிரட்டுகிறான். இறுதியில் ஜேக்கும் அவனது குடும்பத்தினரும் தப்பித்தார்களா? மெட்கைனா இன மக்களுக்கும் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

முழுக்க தண்ணீருக்கு அடியில்
இப்படத்தின் கதை முழுக்க முழுக்க தண்ணீருக்கு அடியில் நடப்பதால், படத்திற்காக பிரத்யேக படகுகள், கப்பல்கள் வடிவமைக்கப்பட்டன. 3டி, 4K மற்றும் 48 Frames Per Second என்ற மூன்று தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய இந்த படத்தை அதற்கு ஏற்ப கிரிஸ்டல் க்ளியரான பிரைட்னஸாக விஷூவல், ஐ மேக்ஸ் தரக்கூடிய ஸ்பீக்கர்கள் படத்தின் துல்லியமான சவுண்ட் எஃபெக்ட் திரையரங்கை அலறவிட்டது.

அசுர வேட்டையாடும் அவதார் 2
13 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியான 15 நாட்களில் உலகம் ழுழுவதும் 8,500 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களிலேயே மிக விரைவாக 8 ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அவதார் 2 திரைப்படம்.

5 பாகங்கள்
தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. அவதார் தொடரின் மூன்றாவது படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்றும், நான்காவது பாகம் 2026ம் ஆண்டு, ஐந்தாம் பாகம் 2028ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











