மிஷன் இம்பாசிபிள் படத்தில் அவெஞ்சர்ஸ் நாயகி.. யார் தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகவுள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7 மற்றும் 8ம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்க அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கார்டியன் ஆஃப் கேலக்ஸி படங்களில் மிஸ்டிக் கதாபாத்திரத்தில் நடித்த பாம் க்ளெமன்டிஃப் தேர்வாகியுள்ளார்.

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு இறுதியாக வெளியான மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட் படம் உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை ஈட்டியது.

இந்நிலையில், மிஷன் இம்பாசிபிள் 7 மற்றும் 8ம் பாகம் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும், வரும் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இரு படங்களும் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

மிஷன் இம்பாசிபிள்

நடிகர் டாம் க்ரூஸ் தயாரிப்பில் 1996ம் ஆண்டு மிஷன் இம்பாசிபிள் படம் வெளியானது. ப்ரூஸ் கெல்லர் எழுதி, டிவி தொடராக தயாரிக்கப்பட்ட மிஷன் இம்பாசிபிள் தொடரை படமாக எடுக்க டாம் க்ரூஸ் முடிவு செய்து தயாரித்து நடித்தார். முதல் பாகத்தை பிரையன் டி பால்மா இயக்கியிருந்தார். முதல் பாகம் உலகளவில் வசூலை வாரி குவித்தது மட்டுமின்றி, டாம் க்ரூஸை உலக மக்கள் ரசிக்கும் நடிகராகவும் உயர்த்தியது.

எத்தனை பாகங்கள்

டாம் க்ரூஸ் நடிப்பில் இதுவரை மிஷன் இம்பாசிபிள் படம் 6 பாகங்களாக வெளியாகியுள்ளன. மிஷன் இம்பாசிபிள் (1996), மிஷன் இம்பாசிபிள் 2 (2000), மிஷன் இம்பாசிபிள் 3 (2006), மிஷன் இம்பாசிபிள்: கோஸ்ட் ப்ரோட்டோகால் (2011), மிஷன் இம்பாசிபிள்: ரோக் நேஷன் (2015) மற்றும் மிஷன் இம்பாசிபிள்: ஃபால் அவுட் கடந்த ஆண்டு 2018ல் வெளியானது. முதல் பாகத்தில் இருந்த அதே வேகத்துடன் ஆறாவது பாகத்திலும் பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தி வருகிறார் டாம் க்ரூஸ்.

ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட்

இங்கிலாந்து நடிகர்கள் மட்டுமே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க முடியும் என்ற விதி உள்ளதால், ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மீது டாம் க்ரூஸுக்கு இருந்த ஆர்வமே மிஷன் இம்பாசிபிள் படங்களை தயாரிக்க டாம் க்ரூஸ் முன் வந்தார் என்று சிலர் சொல்கின்றனர். ஈதன் ஹன்ட் எனும் ரகசிய உளவாளி கதாபாத்திரத்தில் தான் டாம் க்ரூஸ் 6 பாகங்களிலும் நடித்து வருகிறார்.

பாம் க்ளெமன்டிஃப்

மிஷன் இம்பாசிபிள் படத்தின் 6ம் பாகமான ஃபால் அவுட்டில் நாயகியாக நடித்த ரெபேக்கா ஃபர்குஸன் 7 மற்றும் 8ம் பாகங்களில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் மற்றும் கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி படத்தில் மிஸ்டிக் கதாபாத்திரத்தில் நடித்த பாம் க்ளெமன்டிஃப் அடுத்த இரண்டு பாகங்களுக்கும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X