டைட்டானிக்கை மூழ்கடித்த அவெஞ்சர்ஸ்: பெரிய மனுஷன்னு காட்டிய ஜேம்ஸ் கேமரூன்

By Siva

நியூயார்க்: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் தனது டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த படம் உலக அளவில் இதுவரை 2.189 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

Avengers beat Titanic: James Cameron appreciates Marvel

இதன் மூலம் அவெஞ்சர்ஸ் டைட்டானிக் படத்தின் வசூலை முந்தி உலக அளவில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. டைட்டானிக் 2.187 பில்லியன் டாலர் வசூலித்திருந்தது. 2.8 பில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது அவதார் படம்.

அவெஞ்சர்ஸ் அவதாரின் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பனிக்கட்டியால் உண்மையான டைட்டானிக் மூழ்கியது. அவெஞ்சர்ஸால் என் டைட்டானிக் மூழ்கியுள்ளது. உங்களின் இந்த சாதனையை லைட்ஸ்டாம் என்டர்டெயின்மென்ட் வரவேற்கிறது. திரையுலகம் உயிருடன் மட்டும் இல்லை மேலும் பெரிய அளவில் உள்ளது என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இப்படி அடுத்த படத்தின் சாதனையை மனம் விட்டு பாராட்டவும் பெரிய மனம் வேண்டும். அந்த மனசு ஜேம்ஸ் கேமரூனுக்கு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X