ரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி!
Recommended Video

சென்னை : உலக சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' ஹாலிவுட் சூப்பர்ஹீரோஸ் திரைப்படம் உலகம் முழுவதும் செம வசூல் குவித்து வருகிறது.
அமெரிக்காவில் குறைந்த நாட்களில் 300 மில்லியன் டாலர் வசூல் கடந்த முதல் படம் எனும் சாதனையையும் படைத்துள்ளது 'அவென்ஜர்ஸ்' திரைப்படம். இதற்கு முன்பு 'ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' திரைப்படம் தான் குறைந்த நாட்களில் 300 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த படமாக இருந்தது. அந்தச் சாதனையையும் அடித்து நொறுக்கியுள்ளது இன்ஃபினிட்டி வார்.

'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' படம் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் 808 டாலர் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 5,386 கோடி ரூபாய் ஆகும். இன்னும் பல வசூல் சாதனைகளைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தவிர்த்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் மெகா வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது 'இன்ஃபினிட்டி வார்'. இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு நாட்களில் 200 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவின் பிரமாண்டப் படங்களை விட இந்தப் படத்திற்கு செம ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.
ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல நகரங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது 'இன்ஃபினிட்டி வார் : அவென்ஜர்ஸ்' திரைப்படம். தமிழகத்திலும் இந்த வருடத்தில் வெளியான படங்களின் வசூலில் டாப்பில் இருக்கிறது 'அவென்ஜர்ஸ்'.


Click it and Unblock the Notifications











