தனுஷ் நீங்க எங்கேயோ போயிட்டீங்க.. ஜகமே தந்திரம் வெற்றி பெற வாழ்த்திய அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படம் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
இந்நிலையில், ஜகமே தந்திரம் படம் வெற்றி பெற அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள் ருசோ சகோதரர்கள் வாழ்த்தி உள்ளனர்.
ருசோ சகோதரர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தி கிரேமேன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகளவில்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்
அவதார் படத்தின் வசூலையே தட்டித் தூக்கிய அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருசோ சகோதரர்கள் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு 'குட் லக்' எனக் கூறி வாழ்த்தி உள்ளனர். மேலும், நடிகர் தனுஷை "சூப்பர் டா தம்பி" உன்னுடன் பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சி எனக் ட்வீட் போட்டு நடிகர் தனுஷையே திக்குமுக்காட செய்துள்ளனர்.

சூப்பர் டா தம்பி
அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள் "சூப்பர் டா தம்பி" என்றும் ஜகமே தந்திரம் படத்திற்கு வாழ்த்து சொன்னதையும் அறிந்த நடிகர் தனுஷ் தனது நன்றிகளை ருசோ சகோதரர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் இயக்கத்தில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் எனக் கூறியுள்ளார்.

நன்றி அண்ணா
நடிகர் தனுஷை மட்டும் இன்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையும் டேக் செய்து ருசோ சகோதரர்கள் வாழ்த்திய நிலையில், நன்றி அண்ணா என கார்த்திக் சுப்புராஜ் பதில் ட்வீட் போட்டு நன்றி தெரிவித்துள்ளார். இதை விட பெரிய புரொமோஷன் இந்த படத்திற்கு இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

தி கிரே மேன்
அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். விரைவில் அவரது போர்ஷன் முடிந்து நாடு திரும்ப உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜகமே தந்திரம் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











