சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்
Recommended Video
சென்னை: சென்னையில் அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 1.17 கோடி வசூல் செய்துள்ளது.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் வெளியான மூன்று நாட்களில் ரூ. 186.53 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபீஸிலும் அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் தான் முதலிடத்தில் உள்ளது. படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1.17 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை முந்தியுள்ளது.
பேட்ட படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1.12 கோடி வசூலித்தது. விஸ்வாசம் ரூ. 88 லட்சம் வசூல் செய்தது. அவெஞ்சர்ஸ் படம் சென்னையில் கடந்த சனிக்கிழமை ரூ. 1.37 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.42 கோடியும் வசூலித்துள்ளது.
மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் அவெஞ்சர்ஸ் ரூ. 3.96 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது அவெஞ்சர்ஸ்: என்ட் கேம்.
அவெஞ்சர்ஸ் இதுவரை உலக அளவில் ரூ. 8 ஆயிரத்து 384 கோடி வசூல் செய்து தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications