பாலிவுட் ஜாம்பவான்களை மிரள வைத்த அவெஞ்சர்ஸ்: 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Recommended Video
சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தின் இரண்டு நாள் வசூலை பார்த்து பாலிவுட்காரர்கள் மிரண்டு போயுள்ளனர்.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் பாக்ஸ் ஆபீஸில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்தியாவில் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 53.10 கோடி வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் நேற்று ரூ. 51.40 கோடி வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸான இரண்டு நாட்களில் ரூ. 104.50 கோடி வசூலித்துள்ளது. பிரமாண்டமாக எடுக்கப்பட்ட பாலிவுட் படங்கள் கூட இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்யவில்லை என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வார இறுதி நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடி வசூல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதி நாட்களின் வசூல் விபரம் நாளை தான் தெரிய வரும்.
அவெஞ்சர்ஸ் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகள் பல படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட அமெரிக்காவில் மட்டும் வார இறுதி நாட்களில் ரூ. 2000 கோடி வசூல் வரும் என்று கூறப்படுகிறது.
ஒரு ஹாலிவுட் படம் வார நாளில் ரிலீஸாகி இந்த அளவுக்கு வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











