twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 பில்லியன் டாலர் வசூலை எட்டவிருக்கும் 'அவென்ஜர்ஸ்'.. உலகம் முழுக்க வசூல் சாதனை!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியான 'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் உலகம் முழுவதும் செம வசூல் குவித்து வருகிறது.

    அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் மெகா வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது 'இன்ஃபினிட்டி வார்' திரைப்படம்.

    சைனாவிலும் வெற்றிகரமாக ஓடிவரும் 'இன்ஃபினிட்டி வார்' திரைப்படம் விரைவில் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவென்ஜர்ஸ் வசூல்

    அவென்ஜர்ஸ் வசூல்

    அமெரிக்காவில் குறைந்த நாட்களில் 300 மில்லியன் டாலர் வசூல் கடந்த முதல் படம் எனும் சாதனையையும் படைத்தது 'அவென்ஜர்ஸ்' திரைப்படம். 'ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' திரைப்படத்தின் சாதனையை அடித்து நொறுக்கியது இன்ஃபினிட்டி வார்.

    அவென்ஜர்ஸ்

    அவென்ஜர்ஸ்

    'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' படம் இப்போது வரை உலகம் முழுவதும் 1.63 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 11,029 கோடி ரூபாய் ஆகும். இன்னும் பல வசூல் சாதனைகளைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரமாண்ட ஓப்பனிங்

    பிரமாண்ட ஓப்பனிங்

    அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் மெகா வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது 'இன்ஃபினிட்டி வார்'. இந்தியாவில் மட்டும் வசூல் 260 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவின் பிரமாண்டப் படங்களை விட இந்தப் படத்திற்கு செம ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.

    சாதனை

    சாதனை

    மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான 'பிளாக் பேந்தர்' படம் 1.342 பில்லியன் யுஎஸ் டாலர் வசூல் செய்துள்ளது. 5 மாதத்திற்கு மார்வெல் நிறுவனத்தின் இரு படங்களும் சேர்ந்து 3 பில்லியன் வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளன.

    மூன்று படங்கள் மட்டுமே

    மூன்று படங்கள் மட்டுமே

    இதுவரை 'டைட்டானிக்', 'அவதார்' மற்றும் 'ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' ஆகிய மூன்று படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலர் வசூலைக் குவித்துள்ளன. நான்காவது படமாக விரைவில் அவென்ஜர்ஸ் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    'Avengers: Infinity War' released last April 27, has created mega collections in many countries. The successful collection 'Infinite War' is expected to reach $ 2 billion soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X