பாக்ஸ் ஆபீஸை தொம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்: முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 1,403 கோடி
சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் ரிலீஸான அன்று மட்டும் உலக அளவில் ரூ. 1, 403 கோடி வசூல் செய்துள்ளது.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸாகியுள்ளது. சீனாவில் மட்டும் 2 நாட்கள் முன்கூட்டியே வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு புதிய சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் படம் ரிலீஸான அன்று மட்டும் உலக அளவில் ரூ. 1, 403 கோடி வசூல் செய்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புக் மை ஷோவில் 25 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
சீனாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் ரிலீஸான முதல் நாளே ரூ. 334 கோடி வசூல் செய்துள்ளது. சீனாவில் ரிலீஸான முதல் நாளே அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது அவெஞ்சர்ஸ்.
சீன பாக்ஸ் ஆபீஸில் அவெஞ்சர்ஸ் பல சாதனைகளை செய்து வருகிறது. அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் இந்த வார இறுதிநாட்களில் வட அமெரிக்காவில் மட்டும் ரூ. 1,823 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த வசூல் தொகை ரூ. 2,104 கோடியாக இருக்கும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம், பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது அவெஞ்சர்ஸ்.


Click it and Unblock the Notifications











