twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி, ரஜினி, கமல் தாலி கட்டிய மேடை..இனி பொதுமக்களும் பயன்படுத்தலாம்..ஏவிஎம்- ன் சூப்பர் திட்டம்!

    |

    சென்னை : சென்னைக்கு சினிமா ஆசையுடன் வரும் அனைத்து இளைஞர்களும் படையெடுக்கும் முதல் இடம் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோ என்றால் அது மிகையாகாது.

    அந்த வகையில் அனைவருக்கும் முக்கியமான ஸ்டூடியோவாக இருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோவின் உலக உருண்டை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    தற்போது வெளிநாடுகளில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே பல இடங்களில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இவை அனைத்திற்கும் முன்னோடியாக காணப்படுவது ஏவிஎம் ஸ்டூடியோதான்.

    விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை..தமிழ் சினிமா மார்க்கெட்டை ஏன் கெடுக்கிறீர்கள்..கே.ராஜன் விளாசல்!விஜய்க்கு அவ்வளவு தான் மரியாதை..தமிழ் சினிமா மார்க்கெட்டை ஏன் கெடுக்கிறீர்கள்..கே.ராஜன் விளாசல்!

    கனவுகளுடன் சென்னை வரும் இளைஞர்கள்

    கனவுகளுடன் சென்னை வரும் இளைஞர்கள்

    நடிகர்கள், இயக்குநர்கள் என பல கனவுகளுடன் சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் முதலில் படையெடுக்கும் இடம் என்றால் அது ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோவாகத்தான் இருக்கும். இந்த ஸ்டூடியோவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன் உலக உருண்டை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    முன்னணி நடிகர்கள் நடித்த ஸ்டூடியோ

    முன்னணி நடிகர்கள் நடித்த ஸ்டூடியோ

    மேலும் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் இந்த ஸ்டூடியோவில் நடத்தப்பட்ட பல படங்களில் நடித்துள்ளனர். 60 ஆண்டுகாலங்களாக தென்னிந்திய சினிமாவின் களங்கரை விளக்கமாக அமைந்துள்ள ஏவிஎம் ஸ்டூடியோ ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் அடையாளமாகவும் உள்ளது.

    திருமண மண்டபமாக மாறிய ஸ்டூடியோ

    திருமண மண்டபமாக மாறிய ஸ்டூடியோ

    இதனிடையே இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் இன்றும் இயக்கத்தில் உள்ள படத்தயாரிப்பு கூடம் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோஸ் தற்போது திருமண மண்டபமாக மாறியுள்ளது. இந்த ஸ்டூடியோவில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் பலரும் படத்திற்காக தாலி கட்டிய தருணங்கள் சிறப்பாக அமைந்தது. அந்த தருணங்களை படங்களில் பார்த்து அவர்களது ரசிகர்கள் உற்சாகமடைந்த சூழல் இருந்தது.

    திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்

    திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்

    இந்நிலையில் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் தாலி கட்டி மேடையில் தற்போது பொதுமக்களும் தங்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். தற்போது வெளிநாடுகளில் அதிகமான படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த ஸ்டூடியோவிற்குள் செல்லும்போது பல ஹீரோக்களின் முன்னணி படங்களின் சூட்டிங் மற்றும் பாடல் சூட்டிங்தான் அனைவரது நினைவிற்கும் வரும்.

    முன்னணி நடிகர்கள் தாலி கட்டிய மேடை

    முன்னணி நடிகர்கள் தாலி கட்டிய மேடை

    இதே போல இங்கு செயல்பட்டுவரும் டப்பிங் ஸ்டூடியோவில் டப்பிங் பேசாத பிரபலங்களும் இருக்க முடியாது. இத்தகைய பல்வேறு இனிமையான தருணங்களின் சாட்சியாக இருந்துவரும் ஏவிஎம் ஸ்டூடியோவில் இனி நடிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்பது கண்டிப்பாக சிறப்பான செய்தியாகவே காணப்படுகிறது.

    English summary
    AVM Garden studio going to change as Marriage hall and people will plan their marriage
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X