’சிவாஜி‘ திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள்.. ரஜினி - ஏவிஎம் சரவணன் திடீர் சந்திப்பு!
சென்னை : ஏவிஎம் சரவணன் தனது குடும்பத்தினருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான திரைப்படம் சிவாஜி.
இப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

சிவாஜி
ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த படம் சிவாஜி. 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி இப்படம் வெளிவந்தது. இப்படம் வெளிவந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இப்படத்திற்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
காமெடி,ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், ரஜினி இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்து மிரட்டி இருப்பார். ரஜினியின் திரைப்பயணத்தில் சிவாஜி திரைப்படம் ஒரு மைல்கல்லாக உள்ளது. இப்படத்தில் நடிப்பு, பிரம்மாண்டம், சென்டிமென்ட், சிறப்பான பாடல்கள் என அனைத்தும சிறப்பாக அமைந்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. பாடல் காட்சிகளுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்கள் அதில் ரஜினிகாந்த், ஸ்ரேயாவின் நடனம் என அனைத்தும் அசத்தலாக இருக்கும்.

மறக்க முடியாத அனுபவம்
சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நடிகர் ரஜினிகாந்தை இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதியுடன் சென்று பார்த்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து, சிவாஜி படத்தில் ரஜினி உடன் இணைந்து பணி ஆற்றியது மறக்க முடியாத அனுபவம். அவரின் பாசம் என்னுடைய அனைத்து நாட்களையும் இனிமையாக மாற்றியது என பதிவிட்டு இருந்தார்.

பூங்கொத்து கொடுத்து வாழ்த்து
இந்நிலையில், சிவாஜி திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் எம்_சரவணன், எம்எஸ்_குகன் மற்றும் அருணகுஹன் ஆகியோர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெயிலர்
மேலும், தலைவர் 169 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தின் டைட்டில் போஸ்டரில் ரத்தம் சொட்ட சொட்ட பெரிய கத்தி காட்டப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.படத்தின் ப்ரி புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிடியில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











