3 ஃபோட்டோவுக்கே தாங்கல.. நீங்க எம்ஜிஆர் கிடையாது.. ரஜினியிடம் ஓபனாக அடித்த ஏவிஎம் சரவணன்

சென்னை: பிரபல தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் தனது 86ஆவது வயதில் இன்று உயிரிழந்தார். ஏவிஎம் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை 3.30 மணி வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சரவணன் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது.

தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த ஏவிஎம் நிறுவனத்தை ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு சரவணன் நிர்வகிக்க ஆரம்பித்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் அந்த தயாரிப்பு கம்பெனியின் வளர்ச்சி அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களின் படங்களை தயாரித்திருக்கிறது. அந்தப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகவும் செய்திருக்கின்றன.

ரஜினிக்கு மட்டும் 8 படங்கள்: இவர் நிர்வகித்தபோதுதான் ரஜினியை வைத்து ஏவிஎம் நிறுவனம், 'முரட்டுக்காளை,போக்கிரி ராஜா, பாயும் புலி, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மனிதன், ராஜா சின்ன ரோஜா, எஜமான், சிவாஜி' என மொத்தம் எட்டு படங்களை தயாரித்தது. இந்தப் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானவை. அதிலும் சிவாஜி படம்தான் அதிக பட்ஜெட் கொட்டி எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

AVM Saravanan Dead at 86 Rare Story of His Advice to Rajinikanth Resurfaces
Photo Credit:

ஓய்வில் இருந்த சரவணன்: காலங்கள் மாற காட்சிகளும் மாறும் என்பதற்கேற்ப தற்போதைய காலத்தில் படங்கள் எதையும் ஏவிஎம் தயாரிப்பதில்லை. இடையில் தயாரித்த வெப் சீரிஸும் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதனால் முழுவதும் விலகி ஓய்வில் இருந்தார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் போன அவர்; இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு ரஜினி, சூர்யா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ரஜினியுடன் நெருக்கம்: ஏவிஎம் சரவணன் அனைத்து நடிகர்களுடனும் நெருக்கமாக இருந்தாலும் ரஜினியும் கொஞ்சம் கூடுதல் நட்புடனேயே இருந்தார். சில விஷயங்களுக்கு அவரிடம் ரஜினி ஆலோசை கேட்டதாகவும் சொல்வார்கள். இந்நிலையில் ரஜினியிடம் அவரது அரசியல் பிரவேசம் பற்றி ஏவிஎம் சரவணன் ஓபனாக பேசியது தெரியவந்திருக்கிறது. ஒருமுறை சரவணனிடம் ரஜினிகாந்த், 'நான் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமா?' என்று கேட்டாராம்.

நீங்கள் ஒன்றும் எம்ஜிஆர் இல்லை: அதற்கு சரவணனோ, 'நீங்கள் அரசியலுக்கு சுத்தமாக செட் ஆகமாட்டீர்கள்' என்று எடுத்ததுமே சொல்லிவிட்டாராம். ஏன் ஏன் என்று ரஜினி கேட்க, 'அரசியல் என்பது வேறு உலகம். நீங்கள் ரசிகர்கள் வந்து உங்களுடன் புகைப்படம் எடுத்தாலே மூன்றாவது ஃபோட்டோ எடுக்கும்போதே போதும் என்று கையை காண்பித்துவிடுகிறீர்கள். ஆனால் அரசியல் அப்படி இல்லை. அங்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. எம்ஜிஆரிடம் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வந்தால் அவரது வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி கசங்கும்வரை ஃபோட்டோ எடுப்பார். அந்த மாதிரியெல்லாம் உங்களால் முடியாது என்று கூறிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X