twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான இந்தியாவை தருவோம் - சல்மான் கான்

    |

    சென்னை: சுத்தமான ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கவும், நம்முடைய வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமுடன் வாழ பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார். பச்சை பசேலென இருக்கும் மரங்களை காப்பாற்றவும், நீர் நிரம்பி வர தண்ணீரை சேமிப்போம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பருவநிலை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பிளாஸ்டிக் பயன்பாடு இந்த கிரகத்தை எவ்வாறு அழிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    Avoid plastics for healthy future generation says Salman khan

    சமீபத்தில் வெளியாகிய பாரத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சல்மான் கான், அடுத்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் 20ஆவது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் கலந்து கொண்டார் நடிகர் சல்மான் கான்.

    அங்கு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, முதலில் பசுமையான பச்சை பசேலுன்னு இருக்குற மரங்களை காப்பாற்றவும், நீர் நிரம்பிவர தண்ணீரை சேமிப்போம் மற்றும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்.

    மோடி கொண்டு வந்த ஸ்வாச் பாரத் என்று சுத்தமான ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவேன். பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார். இந்த விழாவில் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த உலகில் நாம் வாழ வேண்டும் என்று நடிகை மாதுரி கூறினார்.

    எனக்கு குழந்தைகள் இருப்பதால், எங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் நாங்கள் எந்த வகையான உலகை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் கூறுவேன். நாம் நமக்குள்ளேயே உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். நான் ஒரு சிறந்த குடிமகனாக இருப்பேன் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நான் ஏதாவது செய்யப்போகிறேன் என்றும் மனதிற்குள் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் மாதுரி தீட்சித் கூறினார்.

    மேலும் நடிகை மாதுரி கூறுகையில், சுற்றுச்சூழலுக்காக நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, அதோடு இது நாம் ஒவ்வொருவரும் கடமையும் கூட என்று கூறினார். 12 நாடுகளுக்குப் பிறகு, ஐஃபா (International Indian Film Academy Awards) விருதுகள் இறுதியாக மும்பையில் நடைபெற இருப்பதில் தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாக நடிகை மாதுரி கூறினார். இந்த ஆண்டு, விருது வழங்கும் விழா செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும்.

    English summary
    To save greenery trees and water and our future generation should stay healthy, we have to avoid plastics, said Actor Salman Khan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X