காளை மாடு.. அவ்வை சண்முகி படத்தில் நடிச்ச அந்த பாப்பாவா இது.. எப்படி இருக்காங்க பாருங்க!

சென்னை: கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரமான ஆன் அன்ரா (Ann Alexia Anra) இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

Avvai Shanmugi child artist Ann Anra turned 33 years old and check out her latest photos

காளை மாடு என கமல்ஹாசனை அந்த குட்டிப் பாப்பா சொல்வதும் அவரது நடிப்பும் இன்னமும் ரசிகர்கள் மனதில் அப்படியே நின்று ஆடிக் கொண்டிருக்கிறது.

33 வயதாகும் ஆன் அன்ராவுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடிக்கவே வாய்ப்பு வந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவ்வை சண்முகி: முன்னணி நடிகர்கள் யாரும் பக்காவான காமெடி கமர்ஷியல் படங்களில் கமல் அளவுக்கு சின்சியராக நடித்து ரசிகர்களை என்டர்டெயின் செய்திருப்பார்களா? என்றால் அது சந்தேகம் தான். சமீபத்தில் வந்த சிவகார்த்திகேயன் வரை மாவீரன், ஹீரோ என ஆக்‌ஷன் படங்களில் தான் ஆர்வம் செலுத்தி வருகிறார். மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே சம்மந்தம், பஞ்ச தந்திரம், அவ்வை சண்முகி, மும்பை எக்ஸ்பிரஸ் என பல சூப்பர் டூப்பர் காமெடி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் கமல்ஹாசன். அதிலும், பெண் வேடத்தில் அவர் நடித்த அவ்வை சண்முகி படம் இப்போ டிவியில் போட்டாலும் அதை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Avvai Shanmugi child artist Ann Anra turned 33 years old and check out her latest photos

குட்டி பாப்பா: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படத்தில் கமல் மற்றும் மீனாவுக்கு மகளாக நடித்தவர் ஆன் அன்ரா தற்போது 33 வயது பெண்ணாக இன்ஸ்டாகிராமில் அசத்தி வருகிறார். பிராஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் அவர் காவலன் செயலியை உருவாக்குவதிலும் பணியாற்றி உள்ளார்.

Avvai Shanmugi child artist Ann Anra turned 33 years old and check out her latest photos

எப்படி இருக்கார் பாருங்க: 33 வயதான ஆன் அன்ரா சினிமாவில் ஆர்வம் செலுத்தவில்லை என்றாலும் மாடலிங் துறையில் மாஸ் காட்டி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பதில் இவர் நடிக்க வேண்டியது என்றும் வெற்றிமாறன் சார் கேட்டும் முடியாதுன்னு சொல்லி பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணி உள்ளார் ஆன் ஆன்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X